- Advertisement -

ஒருபுறம் இந்திய வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட மறுபுறம் ரிஷப் பண்ட் செய்த செயல் – நெகிழவைத்த தருணம்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக 17 ஆண்டுகள் கழித்து டி20 உலக கோப்பை தொடரின் சாம்பியன்ஷிப்பை வென்று அசத்தியது. இந்திய அணியின் வெற்றி பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்களை பெற்று வரும் வேளையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் பல ஆண்டு காத்திருப்பு பிறகு பெற்ற இந்த சாம்பியன்ஷிப்போடு அவர்கள் இருவரும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வையும் அறிவித்திருந்தனர்.

- Advertisement -

நேற்று நடைபெற்ற முடிந்த இந்த போட்டி முடிந்ததும் இந்திய அணியின் வீரர்கள் மைதானத்திலேயே உணர்ச்சிவச மிகுதியால் வெற்றியை சந்தோஷமாக கண் கலங்கியபடி கொண்டாடி வந்தனர். அதே வேலையில் மறுபுறம் முதல் முறையாக உலக கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு வந்த தென்னாப்பிரிக்க அணி கையில் இருந்த வெற்றியை தவறவிட்ட சோகத்தில் இருந்தது.

அந்த அணியின் பெரும்பாலான வீரர்கள் கண்கலங்கி மைதானத்தில் அப்படியே அமர்ந்தனர். ஒருபுறம் இந்திய அணி இப்படி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வர மறுபுறம் ரிஷபன்ட் தென்னாப்பிரிக்க வீரர்களுக்காக செய்த செயல் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் கையில் இருந்த வெற்றியை தவற விட்டு தென்னாப்ரிக்க வீரர்கள் துவண்டு போயிருந்ததை கண்ட ரிஷப் பண்ட் அவர்களது அருகில் சென்று அனைவருக்கும் ஆறுதல் கூறினார். குறிப்பாக அந்த அணியின் மூத்த வீரரான டி காக் கடைசியாக விளையாடிய டி20 போட்டி இது என்பதால் மகளுடன் சோகமாக மைதானத்தில் அமர்ந்திருந்தார்.

இதையும் படிங்க : 6 தோல்விகளின் வேதனை எனக்கும் தெரியும்.. தொடர்ந்து அதை செய்ங்க.. கோலி, ரோஹித்தை ஓய்வுக்கு வாழ்த்திய சச்சின்

அவரது அருகில் சென்ற ரிஷப் பண்ட் அவருடன் சில வார்த்தைகள் பேசி அவரை புன்னகைக்க வைத்தார். மேலும் சில தென்னாப்பிரிக்க வீரர்களிடம் நேரில் சென்று ஆறுதலாக பேசினார். இப்படி இந்திய அணியின் வீரர்கள் கொண்டாட்டத்தில் இருக்கும்போது ரிஷப் பண்ட் எதிரணியின் வீரர்களை ஆசுவாசப்படுத்தியது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -