தோணி நிர்வகிக்கும் நிறுவனம்,இந்தியாவில் விளையாட்டு மற்றும் கேளிக்கை பூங்கா அமைக்க உள்ளது – எங்கு தெரியுமா ?

- Advertisement -

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு மையமாக ரிதி ஸ்போர்ட் திட்டமிட்டுள்ளது.தோனி நிர்வகிக்கும் நிறுவனமான ரிதி ஸ்போர்ட்ஸ் ஒரு கேளிக்கை பூங்கா உருவாக்க 1,500 கோடி செலவிடப்பட உள்ளது.

dhoni

- Advertisement -

இந்திய அணியின் தூண் மஹேந்திரசிங் தோனி நிர்வகிக்கும் நிறுவனமான ரிதி ஸ்போர்ஸ் குருகிராம் பகுதியில் சுமார் 1500கோடி மதிப்பீட்டில் “அப்பு கர்” என்கிற கேளிக்கை பூங்காவை தொடங்க திட்டமிட்டுள்ளது.இதற்காக குருகிராமில் 33ஏக்கர் இடம் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

1500 கோடி பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்படவுள்ள இந்த பூங்காவில் விளையாட்டு,பொழுதுபோக்கு,ஷாப்பிங் தொடர்பான கட்டிடங்கள் கட்டப்படவுள்ளன.

இதுகுறித்து பேசிய அந்நிறுவனத்தின் மேனேஜர் அருண் பாண்டே “இந்த பூங்காவை இந்த நாட்டின் பெரிய மற்றும் பொழுதுபோக்கு தளமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். இது பற்றிய திட்டமிடுதலுக்காக அடுத்த மூன்று மாதங்களை எடுத்துக்கொள்ள உள்ளோம்.அதன்பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பரிசீலிப்போம் என்றார்.

Advertisement