ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோலிக்கு பதிலாக இளம் மும்பை வீரர்..! – யார் தெரியுமா ?

virat
- Advertisement -

கிரிக்கெட்டில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுடன் மோதவுள்ளது. இதற்க்காக ஆப்கானிஸ்தான் அணி அடுத்த மாதம் இந்தியா வரவிருக்கிறது. ஆனால் இந்த போட்டியில் இந்திய கேப்டன் விராட் அணியில் இடம்பெற மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இந்தியாவில் அடுத்த மதம் 14 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
virat1

மேலும் இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பங்குபெற மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளது. அதனால் அந்த அணிக்கு கேப்டனாக விராட் கோலி இருப்பதால் ஆப்கானிஸ்தான் தொடரில் கோலி பங்கு பெற மாட்டார் என்பது உறுதி. மேலும் இந்த தொடரில் பல முன்னணி வீரர்கள் பங்கு பெற மாட்டார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.

- Advertisement -

அதனால் அபிகானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரஹானே செயல்படுவர் என்று எதிர்பார்க்கபட்டது. மேலும் தற்போது கோலிக்கு பதிலாக யார் மாற்றாக இருப்பார் என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இந்த போட்டியில் விளையாடும் வீரர்கள் யார் யாரக இருக்கலாம் என்று சில நாட்களுக்கு முன்னர் பி.சி.சி.ஐ ஒரு தகவலை தந்தது.

shreyas

அதில் கோலிக்கு பதிலாக ஷ்ரேயஸ் ஐயரும், ஜடேஜாவிற்கு பதிலாக அக்சர் படேலும், ஹர்டிக் பாண்டியாவிற்கு பதிலாக விஜய் ஷங்கர் போன்றவர்களை நினைவில் வைத்துள்ளோம் என்று தெரிவித்திருந்தது. அதுபோக இந்த ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடரில் ஒரு சில முக்கிய வீரர்கள் Shreyas Iyer பங்குபெற மாட்டார்கள் என்று வந்த செய்தி வெறும் வதந்தி தான் என்று பி.சி.சி.ஐ திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

மேலும் ஒரு சில ஊடகங்களில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் புஜாரா மற்றும் இஷாந்த் சர்மா விளையாடமாட்டார்கள் என்று ஒரு சில தகவல்களும் வந்து கொண்டு இருக்கின்றது.

Vijay

ஆனால் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிவரும் புஜாரா எப்படி இந்த டெஸ்ட் போட்டியில் இடம்பெறாமல் இருப்பார் என்பதும் கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது. இதையடுத்து இந்த போட்டிகள் எல்லாம் முடிந்து இந்திய அணி ஐயர்லாந்துடன் அடுத்த மாதம் 27 ஆம் தேதி 2 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஆனால் அந்த தொடரில் நிதாஸ் தொடரில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் இருப்பார்கள் என்று தகவல்கள் வைத்துள்ளது.

Advertisement