இந்திய அணியின் ப்ளூ பிரிண்ட்டை எடுத்து வெற்றி பெறப்போகும் ஆர்சிபி! இந்த முறை திட்டம் இதுதான்!

Rcb
- Advertisement -

ஐபிஎல் தொடர்களில் வருடாவருடம் கோப்பைக்கு ஆசைப்பட்டு 12 வருடம் கடந்துவிட்டது. தற்போது வரை ஒரு கோப்பையை கூட பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியால் வெல்ல முடியவில்லை. அந்த அணி ஒவ்வொரு முறையும் பேப்பரில் நல்லாத்தான் இருக்கும். உலகின் தலை சிறந்த அணியாக கட்டமைக்கப்படும். ஆனால் யார் சூனியம் வைத்தார்கள் என்று தெரியவில்லை.
கடந்த 12 வருடமாக ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை.

Rcb

- Advertisement -

ஆனால் இந்த முறை எப்படியாவது கோப்பையை வென்று விட வேண்டுமென்று அணியில் பல மாற்றங்களைச் செய்து திட்டங்களை தீட்டி வருகிறது பெங்களூரு அணி. அந்த அணியின் பயிற்சியாளர் இயக்குனர் முதற்கொண்டு, இயக்குனர் வரை அனைவரும் மாற்றப்பட்டுள்ளனர்.
இது முதல் திட்டமாக இருந்தாலும் இரண்டாவதாக அணியில் புதிய வீரர்கள் சிலரை எடுத்து உள்ளனர்.

ஆஸ்திரேலிய வீரர்கள் ஆரோன் ஃபின்ச், ஜோசுவா பிலிப், கேன் ரிச்சர்ட்சன், தென்னாப்பிரிக்க வீரர்கள் கிரிஸ் மோரிஸ், மீண்டும் டேல் ஸ்டெயின் மற்றும் இலங்கை வீரர் இசுரு உதானா ஆகியோரை பெங்களூர் அணி வாங்கியது. இவர்கள் அனைவரும் பெங்களூரு அணிக்கு பக்கபலமாக இருப்பார்கள் என்றே தெரிகிறது.

RCB

இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, பெங்களூரு அணியின் கேப்டனாக பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. இந்திய அணியின் கேப்டனாக செயல்படும் விராட் கோலி வெற்றிகளை வாரிக் குவித்து பல சாதனைகளை படைக்கிறார். ஆனால் கடந்த முறை நடைபெற்ற ஐபிஎல் கோப்பை தொடரில் கடைசி இடத்தை மட்டுமே பெங்களூரு அணியால் பெற முடிந்தது.

- Advertisement -

இதனால் இந்த தொடரிலும் இந்திய அணியின் ப்ளூ பிரிண்ட்டை வைத்து விராட் கோலி பெங்களூரு அணியையும் சரிபடுத்த போவதாக தெரிகிறது. ஆம், இந்திய அணியில் ரோகித் சர்மாவை போன்று பெங்களூரு அணிக்கு ஆரோன் பின்ச் மற்றும் ஷிகர் தவானை போன்று பார்த்திவ் படேல் செயல்பட உள்ளனர்.

Abrcb

அதனை தாண்டி அதிரடியாக ஆட ஏபி டி வில்லியர்ஸ் ஆல்-ரவுண்டராக என பேட்டிங் பட்டையைக் கிளப்புகிறது அதேபோல் பந்துவீச்சிலும் டேல் ஸ்டைன், ரிச்சர்ட்சன், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் இருக்கின்றனர். இதனால் கிட்டத்தட்ட பெங்களூர் அணி இந்த முறை இந்திய அணியை போன்றே இருக்கிறது. இதனையெல்லாம் தாண்டி அணி வீரர்களுக்கு புதிய நம்பிக்கையை வழங்க வேண்டும் என அந்த அணியின் பெயர் மற்றும் லோகோ மாற்றப்பட்டுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற பெயரில் இருந்த பெங்களூர் நீக்கப்பட்டு ராயல் சேலஞ்சர்ஸ் என்று மாற்றப்பட்டுள்ளது .

மேலும், அனைத்து சமூக வலைத்தளத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக இந்திய அணியில் பந்துவீச்சு இல்லாததைப் போன்று பெங்களூரு அணியின் பந்துவீச்சு இருந்ததில்லை. பேட்டிங்கை மட்டுமே வைத்து ஆடிக் கொண்டிருந்தது. இந்த முறை பல அனுபவ பந்துவீச்சாளர்களை களமிறக்கியுள்ளது பெங்களூரு அணி.இப்படியாக பல மாற்றங்களை வைத்துக்கொண்டு பெங்களூரு அணி தயாராக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இந்த முறையாவது கோப்பையை வென்று வெல்கிறதா என்று.

Advertisement