- Advertisement -
ஐ.பி.எல்

மும்பையை முந்திய ஆர்சிபி சேசிங்கில் புதிய சாதனை.. தவானை பின்னுக்குத் தள்ளிய கிங் கோலி.. 2 சாதனை

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் குஜராத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்தது. அகமதாபாத் நகரில் ஏப்ரல் 28ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 201 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் 84*, ஷாருக்கான் 58 ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த பெங்களூரு அணிக்கு கேப்டன் டு பிளேஸிஸ் 24 (12) ரன்களும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி கடைசி வரை அவுட்டாகாமல் 70* (44) ரன்களும் எடுத்தனர். அவர்களை விட 3வது இடத்தில் களமிறங்கி குஜராத் பவுலர்களை தாறுமாறாக அடித்து நொறுக்கிய வில் ஜேக்ஸ் சதமடித்து 100* (41) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

மிரட்டிய பெங்களூரு:.
அதனால் 16 ஓவரிலேயே 206/1 ரன்கள் எடுத்த பெங்களூரு தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. மேலும் இப்போட்டியில் 24 பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்ற பெங்களூரு அணி ஐபிஎல் வரலாற்றில் 200+ ரன்களை அதிவேகமாக சேசிங் செய்து அணி என்ற மும்பையின் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன் 2023 சீசனில் பெங்களூரு அணிக்கு எதிராக வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் மும்பை அணி 21 பந்துகளில் 200+ ரன்கள் இலக்கை சேசிங் செய்ததே முந்தைய சாதனையாகும். மேலும் இப்போட்டியில் அடித்த 70 ரன்களையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் சேசிங் செய்த போட்டிகளில் விராட் கோலி 24 முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்துள்ளார்.

- Advertisement -

இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் சேசிங் செய்த போட்டிகளில் அதிக முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன் மற்றொரு நட்சத்திர வீரர் சிக்கர் தவான் 23 முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அத்துடன் இந்த 70 ரன்களையும் சேர்த்து 2024 ஐபிஎல் தொடரில் விராட் கோலி 500 ரன்கள் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: நானே பலமுறை ஆச்சரியப்பட்டு ருதுராஜ் கெய்க்வாட் கிட்ட அதைப்பத்தி கேட்டு இருக்கேன் – மைக்கல் ஹஸி பாராட்டு

இதே போல ஐபிஎல் தொடரில் 7 முறை அவர் 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் அதிக முறை ஒரு சீசனில் 500+ ரன்கள் அடித்த வீரர் என்ற டேவிட் வார்னர் சாதனையும் விராட் கோலி சமன் செய்தார். இதற்கு முன் டேவிட் வார்னரும் ஐபிஎல் தொடரில் 7 முறை 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -