தெ.ஆ அணியை மடக்க ரிஷப் பண்ட் வெச்சு இந்தியா செய்த மாஸ்டர்பிளான்.. நேரலையில் பாராட்டிய ரவி சாஸ்திரி

- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி தோற்கடித்தது. அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா உலகின் புதிய சாம்பியனானது. அத்துடன் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வந்த தொடர்ச்சியான தோல்விகளையும் இந்தியா நிறுத்தியது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.

முன்னதாக ஜூன் 29ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் 34/3 என சரிந்த இந்தியாவை விராட் கோலி 76, அக்சர் பட்டேல் 47, துபே 27 ரன்கள் அடித்து காப்பாற்றினர். அதனால் தப்பிய இந்தியா 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதைத் துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு டீ காக் 39, திரிஷ்டன் ஸ்டப்ஸ் 31 ரன்கள் அடித்து வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தனர்.

- Advertisement -

இந்தியாவின் பிளான்:
அவர்களுடன் சேர்ந்து மிடில் ஆர்டரில் 2 பவுண்டரி 5 சிக்சர்களை பறக்க விட்ட ஹென்றிச் க்ளாஸென் 52 (27) ரன்கள் விளாசி கிட்டத்தட்ட இந்தியாவின் தோல்வியை உறுதி செய்தார். ஏனெனில் அவருடைய அதிரடியால் கடைசி 4 ஓவரில் தென்னாப்பிரிக்காவுக்கு வெறும் 26 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் இந்திய ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

ஆனால் அப்போது விக்கெட் கீப்பரான ரிசப் பண்ட் தம்முடைய முழங்காலில் வலியை உணர்வதாக சொல்லி இந்திய அணியின் மருத்துவரை வர வைத்தார். அப்படியே களத்தில் அமர்ந்து முழங்காலுக்கு பேண்டேஜ் போட்டுக் கொண்ட அவர் கிட்டத்தட்ட 3 நிமிடங்கள் போட்டியை வேண்டுமென்றே தாமதம் செய்தார். உண்மையில் அது அடித்து நொறுக்கிக் கொண்டிருந்த தென்னாப்பிரிக்காவின் வேகத்தை நிறுத்தியது என்றே சொல்லலாம்.

- Advertisement -

ஏனெனில் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்த பந்திலேயே பாண்டியா வேகத்தில் க்ளாஸென் அவுட்டானார். அதைத் தொடர்ந்து பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் துல்லியமாக பந்து வீசி அழுத்தத்தை உண்டாக்கினர். அதனால் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட போது டேவிட் மில்லர் அடித்த சிக்சரை தடுத்த சூர்யகுமார் இந்தியாவின் உலகக் கோப்பையை உறுதி செய்தார்.

இதையும் படிங்க: இன்னும் ஒரு கடமை பாக்கியிருக்கு.. வெளியேறும் முன் விராட் கோலிக்கு வேண்டுகோள் வைத்துச்சென்ற – ராகுல் டிராவிட்

அப்படி தென்னாப்பிரிக்காவின் வேகத்துக்கு ரிஷப் பண்ட்டை வைத்து வேகத்தடை போட்ட இந்தியாவின் மாஸ்டர் பிளான் பற்றி நேரலையில் ரவி சாஸ்திரி பாராட்டியது பின்வருமாறு. “இந்த போட்டியை மெதுவாக்குவதற்காக இந்தியா தங்களால் சாத்தியமான அனைத்தையும் செய்கிறது. ஏனெனில் அப்போது தான் அவர்களால் களத்தில் இருக்கும் 2 அடித்து நொறுக்க கூடிய பேட்ஸ்மேன்களின் ஃரிதத்தை உடைக்க முடியும்” என்று கூறினார்.

Advertisement