இவ்ளோ தூரம் வந்தது மகிழ்ச்சி.. இது முடிவல்ல இதுதான் துவக்கம்.. அரையிறுதி தோல்விக்கு பிறகு – ரஷீத் கான் ஓபன்டாக்

Rashid
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2024-ஆம் ஆண்டிற்கான ஐசிசி டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரானது இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடையுள்ள வேளையில் அரையிறுதி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின.

இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான அணி 56 ரன்களை மட்டுமே குறிக்க பின்னர் அதனை எளிதாக துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி முதன்முறையாக ஐசிசி தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த அரையிறுதி போட்டியில் தோல்வியை சந்தித்த ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான் இந்த தோல்விக்கு பிறகு பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் :

நிச்சயம் இது ஒரு சோகமான முடிவு தான். நாங்கள் இன்னும் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும். ஆனால் சூழல் எங்களை நன்றாக விளையாட அனுமதிக்கவில்லை. டி20 கிரிக்கெட்டில் எல்லாவிதமான சூழலுக்கும் தயாராக இருக்க வேண்டும். தென் ஆப்பிரிக்கா அணியின் வீரர்கள் இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசினர்.

- Advertisement -

இந்த உலக கோப்பையில் நாங்கள் மகிழ்ச்சியாக விளையாடியுள்ளோம் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. இந்த தோல்வியை நாங்கள் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். இது எங்களுக்கு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் இனிவரும் காலத்தில் எங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த இது ஒரு அடித்தளமாக இருக்கும்.

இதையும் படிங்க : எதை தூக்கி போட்டாலும் அவர் அசரமாட்டாரு.. லேட்டா வந்துருக்கும் இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்தும்.. நாசர் ஹுசைன்

இந்த தொடரில் எங்களது சிறப்பான செயல்பாட்டின் மூலம் இனிவரும் காலங்களில் எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையும், மன உறுதியையும் நாங்கள் பெற்றுள்ளோம். எனவே தான் இந்த தொடரின் தோல்வி எங்களுக்கு ஒரு நல்ல துவக்கம் என்று கூறுகிறேன். நிச்சயம் இனிவரும் காலங்களில் நாங்கள் மிகச் சிறப்பான கம்பேக் கொடுப்போம் என ரஷீத் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement