இதை செஞ்சுட்டா போதும் எங்கள யாராலும் வீழ்த்த முடியாது.. நியூஸிலாந்து வெற்றி பற்றி ரசித் பேட்டி

Rashid Khan 2
- Advertisement -

பரபரப்பாக நடைபெற்று வரும் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் 14வது லீக் போட்டியில் நியூசிலாந்தை 84 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது. ஜூன் 8ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு கயானா நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 159/6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரகமனுல்லா குர்பாஸ் 80, இப்ராஹீம் ஜாட்ரான் 44 ரன்கள் எடுத்தனர்.

நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட், மாட் ஹென்றி தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 160 ரன்களை துரத்திய நியூஸிலாந்து ஆரம்பம் முதலே திணறலாக விளையாடி 15.2 ஓவரில் 75 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு யாருமே 20 ரன்கள் தாண்டாத நிலையில் அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 18 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

தரமான பவுலர்கள்:
ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ரசித் கான் 4, பரூக்கி 4 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக நியூசிலாந்துக்கு எதிராக ஒரு வெற்றியை பதிவு செய்து ஆப்கானிஸ்தான் புதிய வரலாறு படைத்தது. இந்நிலையில் இது போன்ற சவாலான பிட்ச்களில் 160 – 170 ரன்களை எடுத்து விட்டால் அதை உலகின் எந்த கிரிக்கெட் அணியாலும் தங்களுக்கு எதிராக சேசிங் செய்ய முடியாது என்று ஆப்கானிஸ்தான் கேப்டன் ரசீத் கான் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் அந்தளவுக்கு தங்களிடம் தரமான பவுலர்கள் இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது டி20 கிரிக்கெட்டில் எங்களின் சிறந்த செயல்பாடு. குறிப்பாக நியூசிலாந்து போன்ற பெரிய அணிக்கு எதிராக இது அற்புதமான செயல்பாடு. இந்த பிட்ச்சில் ரன்கள் அடிப்பது எளிதாக இல்லை. இருப்பினும் குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சிறப்பாக பேட்டிங் செய்தனர். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய மூன்றிலும் நாங்கள் சூப்பரான செயல்பாடுகளை வெளிப்படுத்தினோம்.

- Advertisement -

“இந்த அணியை வழி நடத்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். முதல் 6 ஓவரில் நாங்கள் 30 ரன்கள் மட்டுமே எடுத்தது பரவாயில்லை. அங்கிருந்து இயற்கையான ஆட்டத்தை விளையாடி ஸ்கோர் அடிப்பதை பற்றி நாங்கள் பேசினோம். 160 – 170 ரன்களை எடுத்தால் இது போன்ற பிட்ச்களில் அசத்துவதற்கு எங்களிடம் பவுலர்கள் உள்ளனர். அங்கு நல்ல லைன், லென்த்தை மற்றும் தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும்”

இதையும் படிங்க: 4 விக்கெட்ஸ்.. நியூஸிலாந்தை தெறிக்க விட்ட ரசித் கான்.. 17 வருட சாதனையை தூளாக்கி புதிய உலக சாதனை

“எங்களுடைய திறமையை பயன்படுத்தினால் எங்களுக்கு எதிராக 160 ரன்களை சேசிங் செய்வது கடினமாகும். வெற்றி தோல்வியைத் தாண்டி நாங்கள் 100% செயல்பாட்டை கொடுக்க வேண்டும். அதைக் கொடுக்கவில்லை என்றால் ஏதோ தவறி விடும். முழுமுயற்சியை கொடுக்கும் வரை நான் முடிவை பற்றி கவலைப்படுவதில்லை. பரூக்கி எங்களின் வெற்றிக்கான அடித்தளத்தை கொடுத்தார். 2 போட்டிகளிலும் அசத்திய அவர் இன்னும் வேலை செய்து முன்னேற வேண்டும்” என்று கூறினார்.

Advertisement