டி20 போட்டியில் தலைசிறந்த ஸ்பின்னர் இவர்தான்..! சச்சின் டெண்டுல்கர் கணிப்பு..!

sachin
- Advertisement -

கிரிக்கெட் உலகின் லிட்டில் மாஸ்டர், காட் ஆப் கிரிக்கெட், மாஸ்டர் பிளாஸ்டர் என்று பல புகழை கொண்டவர் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் உலகின் பரிணாமத்தை முழுவதுமாக மாற்றியமைத்தார். சச்சினின் ஆட்டத்தை காணவே பல ரசிகர்கள் மைதானத்தில் குவிந்து விடுவார்கள். அந்த அளவிற்கு கிரிக்கெட் உலகில் ஜாம்பவானாக இருந்த சச்சின், ஆப்கானிஸ்தான் இளம் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் தான் உலகின் சிறந்த சூழல் பந்துவீச்சாளர் என்று ட்விட்டரில் புகழ்ந்துள்ளார்.
sachin

அங்கனிஸ்தான் வீரரான ரஷீத் கான் நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார் .இதுவரை 16 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் அணைத்து பந்து வீச்சாளர்களை விடஓவருக்கு 6.88 ரன்களை கொடுத்து குறைந்த பந்துவீச்சு சராசரியை பெற்றுள்ளார்.

- Advertisement -

பந்து வீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்ப்பட்டு வருகிறார் இந்த இளம் ஆப்கானிஸ்தான் வீரர். நேற்று நடந்த கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசியத்துடன் 10 பந்துகளில் 34 ரன்களை அடித்து அனைவரையும் உறைய வைத்தார். மேலும் பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
rashid-khan

இந்நிலையில் ரஷித் கானின் திறமையான ஆட்டத்தை பாராட்டியுள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுள்கர் “ரஷித் கான் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் என்று நான் எப்போதும் நினைத்திருந்தேன், ஆனால் தற்போது நான் தயக்கமில்லாமல் கூறுகிறேன் அவர் தான் டி20 போட்டிகளில் உலகில் தலைசிறந்த ஸ்பின்னர் என்று, நினைவிருக்கட்டும் அவர் பேட்டிங்கும் செய்கிறார். சிறந்த பையன் ” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ரஷித் கான் இந்த ஆண்டு சிறந்த டி20 பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement