கோலி விக்கெட்டை எடுத்தவுடன் ஆவேசமாக திட்டிய ராணா – வைரலாகும் வீடியோ

rana

நேற்று இரவு பெங்களூரு – கொல்கத்தா அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் கொல்கத்தா அணி அபாரமாக விளையாடி வெற்றிபெற்றது.அதுவும் குறிப்பாக நேற்றைய போட்டியின் போது கொல்கத்தா அணியின் நிதிஷ் ராணா அபாரமாக செயல்பட்டார்.

Nitish-Rana

24 வயதேயான டெல்லியை சேர்ந்த இளம் வீரரான ராணா கடந்த 2016ம் ஆண்டு முதல் ஐபிஎல்-இல் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருபவர்.நேற்றைய போட்டியின் போது ஒரேயொரு ஓவரை மட்டும் வீசி பெங்களூரு அணியின் முக்கியமான இரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி அனைவரையும் சபாஷ் சொல்ல வைத்தார்.

- Advertisement -

தான் வீசிய ஓவரில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த டிவில்லியர்ஸை முதலில் ஆட்டமிழக்க செய்தார்.அதே ஓவரின் அடுத்த பந்தில் விராட்கோலியை போல்டு ஆக்கி அதிர்ச்சியளித்தார்.பின்னர் விராட்கோலியை அவுட்டாகிய சந்தோசத்தில் குதித்த நிதிஷ் ராணா ஆவேசமாக ஏதோ பேசி திட்டினார்.

வழக்கமாக அவுட் ஆனதும் விராட்கோலி கோபமாக ஏதாவது கத்திக்கொண்டே மைதானத்தை விட்டு வெளியேறுபவர். ஆனால் நேற்றைய போட்டியின் போது ராணா ஆவேசமாக கத்தியபோதும் அதைப்பார்த்து கொண்டே அமைதியாக நடந்து சென்றார். இது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது.பின்னர் கொல்கத்தா அணி பேட்டிங் செய்த போது சிறப்பாக பேட்டிங் செய்த ராணா 25 பந்துகளில் இரண்டு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரிகள் உட்பட 34 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

பெங்களூர் அணியின் குல்வந்த் ஓவரில் நிதிஷ் ராணா அடித்த சிக்ஸர் மைதானத்தில் கடைசியில் இருந்த பார்வையாளர்கள் இடம் வரை சென்று விழுந்தது. ராணா அடித்த சிக்ஸரை பார்த்து கோஹ்லி ஆச்சர்யப்பட்டு கைதட்டினார். கோஹ்லியின் இந்த செயல் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

Advertisement