- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2011 உலககோப்பை இறுதிப்போட்டியில் யுவ்ராஜ்க்கு முன்னர் தோனி களமிறங்க இதுவே காரணம் – ரகசியத்தை பகிர்ந்த ரெய்னா

2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியை இந்திய அணி வெற்றி பெற்று 28 ஆண்டுகள் ஏக்கத்தை தீர்த்துக் கொண்டது. தோனி தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் இலங்கை அணியுடன் மும்பை வாங்கடே மைதானத்தில் மோதிய அந்த போட்டியை கிரிக்கெட் ரசிகர்களால் எளிதில் மறந்து விட முடியாது.

வான்கடே மைதானத்தில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்திற்கு இடையே முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 274 ரன்கள் குவித்தது அதன்பின்னர் 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே சேவாக் விக்கெட் மூலம் அதிர்ச்சி காத்திருந்தது. அதனை தொடர்ந்து சச்சினும் 18 ரன்களில் வெளியேற மைதானத்தில் நிசப்தம் அரும்பியது.

- Advertisement -

அதன்பின்னர் கம்பீர் மற்றும் கோலி ஓரளவுக்கு சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர் அதன்பிறகு கோலி ஆட்டம் இழந்ததும் தோனி கம்பீருடன் இணைந்து சிறப்பாக ரன் குவிப்பை கொண்டுவந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். கம்பீர் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேற தோனி 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்ட நாயகனாக திகழ்ந்தார். இந்நிலையில் இந்த போட்டியில் யுவராஜ்க்கு முன்னர் தோனி சென்றது மிகப் பெரிய சர்ச்சையானது.

இருப்பினும் கோப்பையை வென்றதால் அது குறித்த பேச்சுகள் அப்போது எழவில்லை என்றாலும் அது குறித்து பின்னர் நாளடைவில் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு பதில் அளித்த தோனி என்னால் முதலில் முரளிதரன் பந்துவீச்சை சமாளிக்க முடியும் என்பதனால் நான் யுவராஜுக்கு பதில் இறங்குவதாக பயிற்சியாளரான கேரி க்ரிஸ்டனிடம் கேட்டுக்கொண்டு இறங்கினேன் என்று தோனி பதிலளித்தார்.

- Advertisement -

ஆனால் சேவாக் கூறுகையில் : கம்பீர் ஆட்டம் இழந்தால் ஒரு இடதுகை வீரரையும்(யுவராஜ்), கோலி ஆட்டம் இருந்தால் வலது கை வீரரை(தோனி) இறக்கலாம் என்று சச்சின் யோசனை கூறியதால் தோனி கோலி ஆட்டமிழந்ததும் களம் இறங்கினார் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்த விடயம் குறித்து பேசிய ரெய்னா கூறியதாவது : களத்தில் கம்பீரும் கோலியும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது கோலி ஆட்டம் இழந்ததால் முரளிதரன் பந்துவீச்சில் சமாளித்து தான் என்று தோனி உறுதியாக நம்பியதால் அவரே முன்வந்து கேட்டுக்கொண்டு பயிற்சியாளரிடம் அதனை உறுதி செய்துவிட்டு களத்தில் இறங்கியதாக ரெய்னா தெரிவித்துள்ளார். இதே கருத்தைத்தான் தோனியும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by