ஐ.சி.சி டி20 தரவரிசை பட்டியல் வெளியீடு. கோலியை முந்திய இளம் வீரர் – விவரம் இதோ

Kohli-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிவடைந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் முக்கிய வீரரான கேஎல்.ராகுல் தனது வாழ்நாளில் முதன்முறையாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

Rahul-2

- Advertisement -

இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மொத்தம் 224 ரன்கள் குவித்து தொடர்நாயகன் விருதையும் ராகுல் தட்டிச் சென்றார். கேஎல்.ராகுல் மேலும் சமீபகாலமாக கீப்பிங் பணியையும் தொடர்ந்து அசாதாரணமாக செய்து வருவதால் இவருக்கான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இவ்வாறு டி20 போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர் தற்போது 823 புள்ளிகள் பெற்று பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் பாகிஸ்தானின் பாபர் அசாம் இடம்பிடித்துள்ளார். ரோகித் சர்மா 662 புள்ளிகளுடன் 10வது இடத்திலும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 673 புள்ளிகளுடன் 9வது இடத்திலும் உள்ளனர்.

rahul 4

இந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்தியாவின் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 55ஆவது இடத்திலும் மணிஷ் பாண்டே 58வது இடத்திலும் உள்ளனர். டி20 அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி 4வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பாகிஸ்தானும் அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் எந்த ஒரு இந்தியரும் முதல் 10 இடத்திற்குள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement