நானும் கெய்லும் ஒண்ணு சேர்ந்தோம்னா ..! ராகுல் சொன்ன உண்மை ரகசியம்..!

- Advertisement -

நடந்த முடிந்த 11 வது ஐபிஎல் தொடரில் புதிய உத்வேகத்துடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. அந்த அணியில் புதிதாக சேர்க்கப்பட்ட அதிரிடை வீரர் கேய்ல், அதிரடி வீரர் யுவ்ராஜ், அர்ரோன் பின்ச், மில்லர் என்று பல அனுபவமிக்க வீரர்கள் இருந்தும் இந்த அணி பிளே ஆப் சுற்றிற்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.
rahul

இந்த தொடரில் பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே சுதப்பியது, முதல் சில போட்டிகளில் கெய்ல் தனது அதிரடியை காட்டினாலும், பின்னர் இரண்டாம் பாதியில் சுதப்பினார். இருப்பினும் இந்த அணியின் இளம் வீரர் ராகுல் தனக்குக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி தனது அதிரடி ஆட்டத்தை விளையாடினார்.

- Advertisement -

இந்த தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய ராகுல் 659 ரன்களை குவித்தார். பஞ்சாப் அணிக்கு பல போட்டிகளில் ராகுல் மற்றும் கெய்ல் கூட்டணி சிறப்பான தொடக்கத்தை கொடுத்துவந்தானர். இந்த தொடரில் கெய்ளுடன் ஆடிய தனது அனுபவத்தை தெரிவித்த ராகுல்” கெய்ல் எனக்கு மிக சிறந்த நண்பர். மைதானத்துக்கு வெளியே அவருடன் இருக்கும்போது நேரம் ஓடுவதே தெரியாது.
gayle

பெங்களூரு அணியில் இருந்ததிலிருந்தே எனக்கும் கெய்லுக்கும் இடையேயான நட்பு தொடர்ந்து வருகிறது.இந்த சீசனில் கெய்ல் விளையாடிய விதம் எனக்கு மகிழ்ச்சியளித்தது. களத்தில் அவர் அதிரடியாக ஆடத்தொடங்கிவிட்டால், அந்த போட்டியில் வெற்றி உறுதி.பவர்பிளே ஓவர்களில் எங்கள் இருவரின் பேட்டிங்கும் எதிரணிக்கு மாபெரும் சவாலாக அமைந்தது.” என்று கூறியுள்ளார்.

Advertisement