சாம்பியனா கிளம்புறேன்.. இந்திய அணி அடுத்த 5 – 6 வருஷத்துல இதை செய்வாங்க.. பிரியாமனதுடன் டிராவிட் பேட்டி

Rahul Dravid 2
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனாக இந்திய கிரிக்கெட் அணி சாதனை படைத்துள்ளது. மேலும் 2007க்குப்பின் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக்கோப்பையை வென்று இந்தியா தங்களுடைய கனவை நிஜமாக்கியுள்ளது.

அது போக கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்பில் தொடர்ச்சியாக சந்தித்து வந்த அவமான தோல்விகளையும் உடைத்துள்ள இந்தியா வரலாறு படைத்துள்ளது. இந்த வெற்றியுடன் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய ஜாம்பவான்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். குறிப்பாக வருங்கால இளம் வீரர்களுக்கு வழிவிட்டு தாங்கள் விடை பெறுவதாக அறிவித்துள்ளனர்.

- Advertisement -

விடைபெறும் டிராவிட்:
அதே போல முன்னாள் ஜாம்பவான் இந்திய வீரர் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக சாம்பியன் பட்டத்தை வென்று விடை பெற்றுள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக ஏராளமான வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்துள்ள அவர் வீரராக கோப்பையை வென்றதில்லை. ஆனால் தற்போது 2007 உலகக் கோப்பை தோல்வியை சந்தித்த அதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பயிற்சியாளராக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள அவர் பிரியாமனதுடன் விடை பெற்றுள்ளார்.

அதனால் அவரை சச்சின் போலவே இந்திய வீரர்கள் தங்களுடைய தோளில் சுமந்து பாராட்டி வழியனுப்பினர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டில் ஏராளமான இருப்பதாக ராகுல் டிராவிட் கூறியுள்ளார். எனவே 10 வருட தோல்வியை உடைத்துள்ள இந்தியா அடுத்த 5 – 6 வருடங்களில் நிறைய ஐசிசி கோப்பைகளை வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்திய கிரிக்கெட்டில் அற்புதமான திறமை இருக்கிறது. இம்முறை எனர்ஜி மற்றும் தன்னம்பிக்கை வேற லெவலில் இருந்தது. வருங்காலங்களில் 5 – 6 வருடங்களில் இந்தியா நிறைய கோப்பைகளை வெல்லும். எனது பயணம் கடந்த 2 வருடங்களாக இருந்தது. நாங்கள் விரும்பியது போல் அணியையும் வீரர்களையும் நுணுக்கங்களையும் கட்டமைத்தோம். அந்தப் பயணம் இந்த உலகக் கோப்பையில் மட்டும் துவங்கவில்லை”

இதையும் படிங்க: என் நண்பன் சாதிச்சுட்டான்.. வாழ்க்கை ஒரு வட்டம்.. அங்க தான் இந்தியா பவர்ஹவுஸா உருவாகிருக்கு.. சச்சின் பாராட்டு

“நான் பயிற்சியாளராக வந்த 2021இல் விவாதங்களை துவங்கினோம். எனவே அது 2 வருட பயணமாக உணர்கிறேன். ஒரு வீரராக நான் உலகக் கோப்பையை வெல்வதற்கான அதிர்ஷ்டத்தை பெறவில்லை. ஆனால் என்னுடைய முழு முயற்சியையும் இந்தியாவுக்காக கொடுத்தேன். இருப்பினும் ஒரு பயிற்சியாளராக அதை வெல்வதற்கு நான் அதிர்ஷ்டம் செய்துள்ளேன். நான் இந்த கோப்பையை வெல்வதை எங்கள் வீரர்கள் சாத்தியமாக்கியுள்ளனர். இது ஒரு பெரிய உணர்வு. இது ஒரு சிறந்த பயணம்” என்று கூறினார்.

Advertisement