- Advertisement -
இந்திய கிரிக்கெட்

25 வருஷ கனவு.. எங்க எல்லாரையும் விட தகுதியான அவருக்காக தான் உலகக் கோப்பையே ஜெய்ச்சோம்.. ரோஹித் பாராட்டு

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது. ஜூன் 27ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வந்த வேதனை தோல்விகளையும் உடைத்துள்ளது.

இந்த தொடருடன் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். நவீன கிரிக்கெட்டில் மகத்தான வீரர்களாக செயல்பட்டு இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றிய அவர்கள் தற்போது சாம்பியன் பட்டத்தை வென்று விடை பெற்றுள்ளனர். அதனால் கொண்டாட்டத்திற்கு மத்தியில் ரசிகர்கள் லேசான சோகத்தையும் சந்தித்துள்ளனர்.

- Advertisement -

ரோஹித் பாராட்டு:
இவர்களுடன் இந்தியாவின் முன்னாள் இந்திய ஜாம்பவான் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக விடை பெற்றுள்ளார். ஒரு வீரராக சச்சினுக்கு நிகராக ஏராளமான சாதனைகளையும் வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்த அவர் உலகக் கோப்பையை மட்டும் வென்றதில்லை. ஆனால் தற்போது 2007 உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்த அதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஒரு பயிற்சியாளராக அவர் சாம்பியன் பட்டத்துடன் விடை பெற்றுள்ளார்.

அதனால் சச்சின் போலவே இந்திய வீரர்கள் அவரைப் போட்டியின் முடிவில் தோளில் சுமந்து பாராட்டு தெரிவித்து வழியனுப்பினார். இந்நிலையில் விராட் கோலி மற்றும் தம்மை விட ராகுல் டிராவிட் தான் இந்த சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு தகுதியானவர் என்று கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எங்கள் அனைவரையும் விட ராகுல் டிராவிட் இந்த உலகக் கோப்பைக்கு மிகவும் தகுதியானவர்”

- Advertisement -

“கடந்த 20 – 25 வருடங்களாக அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்கு அபாரமானது. இந்த ஒரே ஒரு கோப்பை மட்டுமே அவருடைய அலமாரியில் தவறி இருந்ததாக நான் கருதுகிறேன். எனவே அவர் கோப்பையை வென்றதற்காக எங்கள் அனைவரது சார்பாக மகிழ்ச்சியடைகிறேன். அவருக்காக நாங்கள் இதை செய்துள்ளோம். தற்போது அவர் எந்தளவுக்கு பெருமையாகவும் ஆர்வமாகவும் இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்கள்”

இதையும் படிங்க: விராட் கோலிக்கு அடுத்து ரோஹித்தும் ஓய்வை அறிவித்து அதுகுறித்து கூறியது என்ன – எமோஷனல் வார்த்தைகள் இதோ

“இந்த வெற்றி பயிற்சியாளர் மற்றும் வீரர்கள் இடையிலான உறவை நாங்கள் வலுவாக பின்பற்றியதற்கான முடிவாகும். இதை நாங்கள் ராகுல் டிராவிட்டுக்காக சாதித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய கிரிக்கெட்டுகாக அவர் ஏராளமானவற்றை செய்துள்ளார்” என்று கூறினார். முன்னதாக எனக்காக வெல்லாமல் நாட்டுக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று ஃபைனலுக்கு முன்பாக ட்ராவிட் சொன்னது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -