- Advertisement -
ஐ.பி.எல்

KXIP vs RR : 182 ரன்கள் என்பது அடிக்கக்கூடிய இலக்கு தான். ஆனால், தோல்விக்கு இதுவே காரணம் – ரஹானே

ஐ.பி.எல் தொடரின் 32 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக ராகுல் 52 ரன்களும், மில்லர் 27 பந்துகளில் 40 ரன்களையும் அடித்தனர். இதனால் ராஜஸ்தான் அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

அதனை தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால் ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக திரிபாதி 50 ரன்களும், பின்னி 11 பந்துகளில் 33 ரன்களையும் அடித்தனர். சிறப்பாக விளையாடிய அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வானார்.

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ரஹானே கூறியதாவது : 182 ரன்கள் என்பது இந்த மைதானத்தில் எட்ட கூடிய இலக்குதான். நாங்கள் இந்த போட்டியை நன்றக துவங்கினோம் இரண்டு சிக்ஸ் அடித்திருந்தால் முடிந்திருக்க வேண்டிய போட்டி இது. ஆனால், இந்த போட்டி குறித்து அதிகமாக குறைகூற எதுவுமில்லை. எங்களது பந்துவீச்சாளர்கள் நன்றாகவே பந்துவீசினார்கள். இதுபோன்ற இலக்கிற்கு மிடில் ஆர்டில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழப்பது நல்லதல்ல.

- Advertisement -

திரிபாதி நன்றாக ஆடினார். மேலும், நானும் பின்னியும் களத்தில் இருக்கும்போது போட்டியை கடைசி வரை கொண்டு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டோம். அதன்படி கடைசி வரை சென்று சில தவறுகளால் ஆட்டத்தை இழந்தோம். இந்த தோல்வியில் இருந்து தவறுகளை திருத்திக்கொள்ள விரும்புகிறோம். மேலும் ஆர்ச்சர் பந்துவீச்சு இந்த போட்டியின் முக்கியமான ஒன்று என்று ரகானே கூறினார்.

- Advertisement -
Published by