- Advertisement -
ஐ.பி.எல்

இம்பேக்ட் பிளேயரை குறை சொல்லாம.. பேட்ஸ்மேன்களிடம் வாழ இதை செய்ங்க.. பவுலர்களுக்கு அஸ்வின் அட்வைஸ்

ஐபிஎல் 2024 தொடர் கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்றது. பொதுவாகவே ஐபிஎல் தொடரில் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிவது வழக்கமாகும். ஆனால் இந்த வருடம் ஒரு படி மேலே சென்ற பேட்ஸ்மேன்கள் பவுலர்களுக்கு கொஞ்சமும் கருணை காட்டாமல் சரமாரியாக அடித்து நொறுக்கி வரலாற்றிலேயே உச்சமாக 1125க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை பறக்க விட்டு சாதனை படைத்தனர்.

குறிப்பாக ஹைதராபாத் அணி மட்டும் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் குவித்து, டெல்லிக்கு எதிராக 5 ஓவரில் 100 ரன்கள் விளாசி, லக்னோவுக்கு எதிராக 9.2 ஓவரில் 166 ரன்களை சேசிங் செய்து 3 சாதனை வெற்றிகளை படைத்தது. அந்தளவுக்கு ஹைதெராபாத் போலவே பெரும்பாலான அணிகளின் பேட்ஸ்மேன்கள் பவுலர்களை முரட்டுத்தனமாக அடித்து நொறுக்கினார்கள்.

- Advertisement -

அஸ்வின் அட்வைஸ்:
அதற்கு கடந்த வருடம் பிசிசிஐ அறிமுகப்படுத்திய இம்பேக்ட் வீரர் விதிமுறை தான் காரணம் என்ற விமர்சனங்கள் எழுந்தது. ஏனெனில் அந்த விதிமுறையால் ஒவ்வொரு அணியும் எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன்களுடன் விளையாடுகின்றன. அதனால் இம்பேக்ட் வீரர் விதிமுறைக்கு தாம் ரசிகன் அல்ல என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மாவே வெளிப்படையாக அதிருப்தியை வெளிப்படுத்தினார். கூடவே மைதானத்தில் பவுண்டரிகளின் அளவு சிறியதாக இருப்பதால் இப்போதெல்லாம் பவுலர்களுக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை என்று முகமது சிராஜ் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் இம்பேக்ட் வீரர் விதிமுறை இல்லாத போதும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடியதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். எனவே அதைக் குறை சொல்லாமல் தொடர்ந்து வாய்ப்பு பெற வேண்டுமெனில் பவுலர்களும் கணிசமாக பேட்டிங் செய்யும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஒருவேளை இம்பேக்ட் வீரர் விதிமுறை இல்லை என்றாலும் இந்த அதிக ரன்கள் அடிப்படும். எனவே வருங்காலத்தில் பவுலர்கள் அனைவரும் ஹிட்டர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் எவ்வளவு தான் நன்றாக பந்து வீசினாலும் பேட்டிங்கிலும் கணிசமான ரன்கள் எடுத்தால் தான் வாய்ப்பு கிடைக்கும். அதற்கு பேட்டிங் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். இந்த விளையாட்டு அதை நோக்கியே செல்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: கேப்டன்சியில் அப்படியே தோனி மாதிரி முடிவுகளை எடுக்கும் பேட் கம்மின்ஸ் – பயிற்சியாளர் பகிர்ந்த தகவல்

அதாவது நன்றாக பவுலிங் தெரிந்தாலும் ஏதாவது ஒரு போட்டியில் பேட்ஸ்மேன்களிடம் பவுலர்கள் அடி வாங்க வாய்ப்புள்ளதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். எனவே பந்து வீச்சுடன் அதிரடியாக பேட்டிங் செய்யும் திறமையையும் கற்றுக் கொண்டால் மட்டுமே பந்து வீட்டில் அடி வாங்கினாலும் பேட்டிங்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என்று அஸ்வின் கூறியுள்ளார். அந்த வகையில் இப்போதே அஸ்வின், பட் கமின்ஸ், ஷமி போன்றவர்கள் கணிசமாக பேட்டிங் திறமையை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -