பாதி ஆஸிக்கு யார்னே தெரியாத குல்தீப்பை.. இனியும் எடுக்கலன்னா நீங்க புத்திசாலி இல்ல.. அஸ்வின் சாடல்

R Ashwin 2
- Advertisement -

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியாவில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. இதைத்தொடர்ந்து கடைசி போட்டி அக்டோபர் 23ஆம் தேதி நடைபெறுகிறது. அதிலாவது குல்தீப் யாதவ் விளையாட வேண்டும் என்பதே பெரும்பாலான இந்தியர்களின் விருப்பமாக இருக்கிறது.

ஏனெனில் சைனாமேன் எனப்படும் வித்தியாசமான பவுலிங் ஆக்சனைக் கொண்ட அவர் பெரிய மைதானங்களைக் கொண்ட ஆஸ்திரேலியாவில் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்கும் திறமையைக் கொண்டுள்ளார். சொல்லப்போனால் 2வது போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவை தோற்கடித்தார். மறுபுறம் அவரைப் போன்ற திறமை கொண்ட குல்தீப் யாதவ் பெஞ்சில் அமர்ந்து இந்தியாவின் தோல்வியை மட்டுமே பார்த்தார்.

- Advertisement -

பாதி ஆஸிக்கி தெரியாது:

இந்நிலையில் இப்போதைய ஆஸ்திரேலிய அணியில் இருக்கும் பாதி பேட்ஸ்மேன்களுக்கு குல்தீப் யாதவ் பந்து வீச்சு தெரியாது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். எனவே 3வது போட்டியிலும் குல்தீப்பை பெஞ்சில் அமர வைத்தால் அது புத்திசாலித்தனமற்ற முடிவு என்று அவர் கௌதம் கம்பீரை மறைமுகமாக சாடியுள்ளார். இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு.

“கடந்த போட்டியில் அக்சர் பட்டேல், சுந்தர் ஆகியோர் விக்கட்டுகளை எடுத்தனர். எனவே அவர்களை நாம் குறை சொல்ல முடியாது. ஆனால் கடந்தப் போட்டியில் நாம் விக்கெட்டுகள் எடுப்பதைப் பற்றி விவாதித்தோம். ஆடம் ஜாம்பா எப்படி 4 விக்கெட்டுகளை எடுத்தார்? ஏனெனில் அவருடைய பந்துகள் சுழன்றது. அது தான் இங்கே வெற்றிக்கான சாவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

அஸ்வின் சாடல்:

“எனக்கு ஒன்றை சொல்லுங்கள். அதாவது எப்போதாவது கூப்பர் கோன்லி, மிட்சேல் ஓவன், மேத்தியூ ஷார்ட் ஆகியோர் குல்தீப்பை எதிர்கொண்டிருக்கிறார்களா? அலெக்ஸ் கேரி அவரை கொஞ்சம் எதிர்கொண்டுள்ளார். ஆனால் அவரும் குல்தீப்புக்கு எதிராக தடுமாற்றமாகவே பேட்டிங் செய்துள்ளார். எனவே இந்த ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசை குல்தீப்புக்கு எதிராக விளையாடியதில்லை”

இதையும் படிங்க: இன்னும் 93 ரன்கள் தேவை.. சேவாக்கை பின்னுக்கு தள்ளி வரலாற்று சாதனையை நிகழ்த்த – ஹிட் மேனுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு

“இது போக அவருக்கு எதிராக விளையாடிய அனைவரும் ஆரம்பத்தில் தடுமாறினார்கள் என்பதை மறக்காதீர்கள். எனவே அவரை பெஞ்சில் அமர வைப்பது புத்திசாலித்தனமான முடிவாக எனக்குத் தெரியவில்லை. 3வது போட்டியில் குல்தீப் விளையாடுவார் என்று நம்புகிறேன். ஹர்ஷித் ராணா விக்கெட்டுகள் மற்றும் ரன்கள் எடுத்தார் என்று நாம் சொல்லலாம். ஆனால் யாரும் குல்தீப் யாதவாக முடியாது. அவரை விளையாட வைப்பது உங்களிடம் கூடுதலான வெடிமருந்து இருப்பதைப் போன்ற பலத்தைக் கொடுக்கும்” என்று கூறினார்.

Advertisement