- Advertisement -
ஐ.பி.எல்

விரேந்தர் சேவாக் முகத்தில் கரியை பூசி சாம்பியன் பிளேயர் என்பதை நிரூபித்த அஸ்வின்.. மாஸ் பின்னணி

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் குவாலிபயர் 1 போட்டியில் ஹைதராபாத்தை தோற்கடித்த கொல்கத்தா நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்திய ராஜஸ்தான் இன்று சென்னையில் நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொள்வதற்கு தகுதி பெற்றது.

அந்தப் போட்டியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவரில் 19 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை 4.8 என்ற அற்புதமான எக்கனாமியில் எடுத்து ராஜஸ்தானின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக 13வது ஓவரில் கேமரூன் க்ரீனை அவுட்டாக்கிய அவர் அடுத்ததாக வந்த கிளன் மேக்ஸ்வெலை கோல்டன் அவுட்டாக்கி போட்டியில் திருப்பு முனையை உண்டாக்கினார்.

- Advertisement -

சாம்பியன் பிளேயர் அஸ்வின்:
அதன் காரணமாக ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் தமிழக ரசிகர்களை பெருமைடைய வைத்தார் என்றே சொல்லலாம். முன்னதாக இந்த வருடம் ராஜஸ்தான் அணிக்காக லீக் சுற்றில் ரவிச்சந்திரன் அஸ்வின் கொஞ்சம் தடுமாற்றமாகவே செயல்பட்டார். குறிப்பாக நிறைய விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் தடுமாறிய அவர் முடிந்தளவுக்கு குறைந்த ரன்களை கொடுத்து நல்ல எக்கனாமியில் பந்து வீச முயற்சித்தார்.

அப்போது விக்கெட்டுகளை எடுக்காமல் நல்ல எக்கனாமியில் மட்டும் பந்து வீசும் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்றவருக்கு தாமாக இருந்தால் தம்முடைய அணியில் இடம் கொடுக்க மாட்டேன் என்று முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் விமர்சித்தார். அத்துடன் இப்படியே தொடர்ந்து செயல்பட்டால் அடுத்த வருடம் நடைபெறும் மெகா ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினை எந்த அணியும் அடிப்படை விலைக்கு கூட வாங்க மாட்டார்கள் என்று சேவாக் ஏளனமாக பேசியிருந்தார். அந்த கருத்து தமிழக ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

- Advertisement -

இருப்பினும் அதற்கெல்லாம் அசராத ரவிச்சந்திரன் அஸ்வின் வாழ்வா – சாவா எனப்படும் எலிமினேட்டர் நாட் அவுட் போட்டியில் பெங்களூரு அணியை தோற்கடித்து ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். அந்த வகையில் தன்னை அழுத்தமான பெரிய போட்டிகளில் அசத்தக்கூடிய சாம்பியன் பிளேயர் என்பதை அஸ்வின் நிரூபித்துள்ளார். அத்துடன் அப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற அஸ்வின் தன்னை குறைத்து மதிப்பிட்ட சேவாக் முகத்தில் கரியை பூசியுள்ளார் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: 124/5 டூ 138க்கு ஆல் அவுட்.. வங்கதேசத்தின் வெற்றியை பறித்த அமெரிக்கா.. உறுப்பு நாடுகளில் புதிய உலக சாதனை வெற்றி

இதைத்தொடர்ந்து இன்று நடைபெறும் ஹைதராபாத்துக்கு எதிரான குவாலிபயர் 2 போட்டியில் அஸ்வின் விளையாட உள்ளார். அதில் தாம் பிறந்து வளர்ந்த சொந்த ஊரான சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் அஸ்வின் களமிறங்குகிறார். ஏற்கனவே அந்த மைதானத்தில் 2011இல் சென்னை அணிக்காக அசத்தியுள்ள அவர் இம்முறை சொந்த மண்ணில் ராஜஸ்தான் அணிக்காக அசத்த வேண்டும் என்பதே தமிழக ரசிகர்களின் விருப்பமாகும்.

- Advertisement -