கோலி சொன்னாலும் சரி. கங்குலி சொன்னாலும் சரி. என் பேட்டிங் ஸ்டைலை மாற்றமாட்டேன் – இந்திய வீரர் பிடிவாதம்

Pujara
- Advertisement -

இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரரான புஜாரா மற்ற வீரர்கள் அனைவரும் பேட்டிங்கில் சொதப்பிய டெஸ்ட் போட்டிகளில் நிலைத்து நின்று இந்திய அணிக்காக வெற்றியை தேடிக் கொடுத்திருக்கிறார். மேலும் இந்திய அணியில் ராகுல் டிராவிட் ஓய்வு பெற்ற பின் அந்த இடத்தை நிரப்புவதற்கு சரியான நபர் என்று தேர்வுக் குழுவினரால் கணிக்கப்பட்டு இந்திய அணிக்கு தேர்வானவர் புஜாரா.

pujarashot

- Advertisement -

மேலும் தான் தேர்வானது சரியானதுதான் என்று கருத்தின்படி தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் டிராவிட் உடன் ஆரம்பகாலத்தில் ஒப்பிடப்பட்டார். மேலும் அவருடைய பொறுமையான நிதான ஆட்டம் அனைவரையும் ரசிக்க வைத்தது. ஆனால் அவரது மந்தமான இப்போது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது. புஜாராவின் பொறுமையான பேட்டிங் ஏற்கனவே கடுமையான விமர்சனங்களை சந்தித்தது ஆனாலும் அவர் தனது பாணியை மாற்றாமல் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

விமர்சனத்திற்கு செவி கொடுக்காமல் தனது பேட்டிங் உத்தியைக் கையாண்டு வந்த புஜாரா சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டின் போது முதல் டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் 81 பந்துகளை சந்தித்து 11 ரன்கள் அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது அவரின் அந்த கொடுமையான மிகவும் சர்ச்சைக்குள்ளானது. அதுமட்டுமில்லாமல் அந்த பொறுமையான இன்னிங்சிற்காக அனைவரும் அவர்களை அவரை விமர்சித்தார்கள்.

pujara

ஆனால் இந்த பொறுமையான இன்னிங்சில் பிறகு அவர்மீது கடுப்பான கோலி அவரை தாக்கும் விதமாக இவ்வளவு பொறுமையாக ஆட வேண்டாம் அடிக்க வந்த பந்துகளை அடித்து விடுங்கள் என்று பேட்டியும் அளித்திருந்தார். ஆனாலும் அதன் பின்னரும் கொஞ்சம்கூட தனது பேட்டிங் ஸ்டைலை மாற்றாத புஜாரா இரண்டாவது டெஸ்டிலும் பொறுமையாக விளையாடினார். தற்போது பெங்கால் அணி எதிராக ரஞ்சிப் போட்டியில் சௌராஷ்டிரா அணிக்காக பங்கேற்ற புஜாரா 237 பந்துகளை சந்தித்து 66 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

- Advertisement -

இவ்வாறு புஜாரா பொறுமையாக ஆடிக்கொண்டிருக்க தற்போது மீண்டும் அவரது பொறுமையான ஆட்டம் சமூகவலைதளத்தில் கிண்டலும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது. இந்நிலையில் அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் : என்னால் பேட்டிங் செய்ய முடியும் ஆனால் சமூக வலைதளங்களுக்கு என்னால் பேட்டிங் செய்ய முடியாது. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மீதான ஆர்வம் அதிகமாக உள்ளதால் அதை மக்கள் அதிகமாக விரும்பி பார்க்கின்றனர்.

pujara

அதனால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு என்னுடைய ஆட்டத்தைப் பற்றி சரியாக தெரியாது எதுவுமே தெரியாமல் நான் மந்தமாக ஆடுகிறேன் என்று விமர்சிக்காதீர்கள். ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். என் பணி அதிரடியாக ஆடுவது அல்ல அணியை வெற்றிக்கு கொண்டு செல்வதற்காக நான் ஆடுகிறேன். அதையேதான் இந்திய அணிகாகவும், ரஞ்சி அணிக்காகவும் செய்து வருகிறேன். இதனால் என்னைப் பற்றி பேசும்போது அதைப்பற்றி நான் நினைப்பது கிடையாது.

நான் சிக்ஸர் விலாசம் போது சில நேரங்களில் நான் அதிரடியாக ஆடுவேன். சில நேரங்களில் மிகவும் பொறுமையாக ஆடுவேன். உண்மையான கிரிக்கெட் ரசிகர்களையும், பார்வையாளர்களும் நான் மதிக்கின்றேன். நான் அடிக்கடி சிக்ஸர் விலாசம் வீரர் அல்ல. அதே நேரத்தில் சமூகவலைதளங்களுக்காக நான் பேட்டிங் செய்ய வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை என்று புஜாரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement