என்னுடைய பேட்டிங் ஸ்டைலை யாரும் விரும்பமாட்டார்கள். அதை நான் எதிர்பார்ப்பதும் கிடையாது – இந்திய வீரர் ஆதங்கம்

Pujara
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான சதீஷ்வர் புஜாரா ராகுல் டிராவிட்டுக்கு பிறகு இந்திய அணியின் அடுத்த தூண் என்று கருதப்பட்டார். மேலும் தனது ஆரம்ப காலத்தில் இருந்து இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார்.

Pujara 1

- Advertisement -

ஆனாலும் அவருடைய பொறுமையான ஆட்டம் அவ்வப்போது ரசிகர்களிடையே கேள்வியை சந்தித்து வருகின்றன. மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டம் தற்போது அவருக்கு எதிரான சர்ச்சையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. அதற்கு முக்கிய காரணம் யாதெனில் அந்த தொடர் முடிவடைந்ததும் கேப்டன் கோலி புஜாராவின் ஆட்டம் குறித்து கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

மேலும் அடிக்கவேண்டிய பந்துகளை அடித்து ஆட முடியும் அனைத்து பந்துகளையும் விட வேண்டாம் என்று அழுத்தம் திருத்தமாக கூறி இருந்தார். இந்நிலையில் தான் ரஞ்சி போட்டியிடும் அதேபோன்று ஆடி அனைவரையும் அதிரவைத்தார் புஜாரா. இந்நிலையில் அவரது ஆட்டம் குறித்து பேசிய புஜாரா கூறுகையில் :

Pujara

நான் சிகப்பு பந்து கிரிக்கெட் அதிகமாக விளையாடி உள்ளேன். மேலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் எனக்கு விளையாட தெரியும் என்றாலும் நான் எப்பொழுதும் டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் ரசித்து விளையாடுகிறேன். கிரிக்கெட்டின் பாரம்பரிய வடிவமான இதில் எனக்கு விளையாடுவது மிகவும் பிடிக்கும்.

- Advertisement -

எனவே ஆரம்பத்தில் இருந்து நான் என்ன பாணியை கையில் எடுத்து விளையாடி வருகிறேனோ அதையே இப்போதும் செய்து வருகிறேன். எனது ஆட்டம் குறித்து யார் விமர்சித்தாலும் எனக்கு கவலை இல்லை. ஏனெனில் எனக்கு டெஸ்ட் கிரிக்கெட்டின் வழிமுறைகளைப் பற்றி தெரியும் அதனால் என்னுடைய பாணியை மாற்றிக் கொள்ளவும் விருப்பமில்லை. ஆனால் என்னுடைய கிரிக்கெட் பாணியை யாரும் பின்பற்ற விரும்பமாட்டார்கள் மட்டும் எனக்கு தெரியும்.

Cheteshwar Pujara

ஏனெனில் இவ்வாறு பொறுமையாக ஆடுவது அவர்களுக்குப் பிடிக்காமல் போகலாம் ஆனால் கிரிக்கெட் களத்தில் பொருத்தவரை பொறுமையும் நிதானமும் ரொம்ப அவசியம். இதனை பொறுத்தவரை என்னுடைய பேட்டிங் ஸ்டைல் எனக்கு திருப்தி அளிக்கிறது. யாரும் என்னை பின்தொடரும் நான் விரும்பவில்லை என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement