அடக்கடவுளே எல்லாருக்கும் ஒரு பிரச்சனை வந்தா ? இவருக்கு இப்படி ஒரு பிரச்சனையா ? – புஜாராவுக்கு ஏற்பட்ட சோகம்

Pujara
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சதீஸ்வர் புஜாரா தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இந்திய அணிக்காக ஆடி வருகிறார். டிராவிட் விட்டுச்சென்ற இடத்தினை நிரப்பும் விதமாக இந்திய அணிக்குள் நுழைந்த புஜாரா தனது நிதானமான ஆட்டத்தின் மூலம் மெல்ல மெல்ல அவரின் இடத்தை நிரப்ப துவங்கினார். அதன்பிறகு தற்போது வரை தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். உள்நாடாக இருந்தாலும் சரி, வெளிநாட்டு தொடராக இருந்தாலும் சரி தனது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியை கரை சேர்ப்பதில் இவர் வல்லவர்.

pujarashot

- Advertisement -

இந்திய அணிக்காக டெஸ்ட் வடிவத்தில் மட்டும் கலந்துகொண்டு விளையாடி வரும் வடிவங்களில் அணியில் இடம் கிடைப்பதில்லை. அதன்காரணமாக ஓய்வாக இருக்கும் நேரங்களில் மற்ற போட்டிகளில் ஆடாத நேரத்தில் வெளிநாடுகளில் நடக்கும் லீக் மற்றும் கவுண்டி போட்டிகளில் கலந்து கொள்வார் மேலும் அதன்மூலம் அவர் கிரிக்கெட்டுடன் டச்சிலேயே இருந்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக இந்திய போட்டிகளை தவிர்த்து இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் ஆடுவது வழக்கம். அந்நாட்டு கவுண்டி அணிகள் புஜாராவின் நிலைப்பு தன்மை காரணமாக அவரை ஒப்பந்தம் செய்வதில் ஆர்வமாக இருந்து வருகின்றனர். தற்போது துவங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் மார்ச் முதல் மே மாதம் வரை நடக்கும் இந்த காலகட்டத்தில் இங்கிலாந்தில் சென்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Pujara

ஏனெனில் முற்றிலும் பொறுமையாக ஆடுவார் என்ற டெஸ்ட் பிளேயர் முத்திரை இவர் மீது குத்தப்பட்டுள்ளதால் அவரை எந்தவொரு ஐ.பி.எல் அணியும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டுவதில்லை. அதன் காரணமாக இவருக்கு ஐபிஎல் ஒப்பந்தம் கிடைப்பதில்லை. இதனால் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவதில் புஜாரா ஆர்வம் காட்டி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக இங்கிலாந்தில் வரும் மே 28ஆம் தேதி வரை அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது என அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக புஜாரா உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது க்ளோசெஸ்டர்ஷைர் அணி.

pujarasad

இந்நிலையில் கொரோனா பாதிப்பினால் புஜாரா தற்போது அந்த தொடரை தவறவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அணிக்காக 6 போட்டிகளில் விளையாட இணைந்தார் புஜாரா. தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் புஜாரா சோகத்தில் இருக்கிறார்.

Advertisement