ஊக்கமருந்து தடை. மனமுடைந்து லண்டன் பயணம். டிராவிட் அழைப்பு – மனம் திறந்த ப்ரித்வி ஷா

Prithvi
- Advertisement -

இந்திய அணியின் இளம் வீரரான ப்ரித்வி ஷா சில மாதங்களுக்கு முன்னர் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக பி.சி.சி.ஐ -யால் தடை செய்யப்பட்டார். இந்நிலையில் அவருடைய தடை காலம் கடந்த 15ம் தேதி முடிந்த நிலையில் தற்போது சையது முஷ்டாக் அலி தொடரில் மீண்டும் பங்கேற்ற ப்ரித்வி ஷா தான் பங்கேற்ற முதல் போட்டியிலேயே 39 பந்துகளில் 63 ரன்கள் அடித்து அசத்தினார்.

Prithvi

- Advertisement -

இந்நிலையில் தடை காலத்தில் தான் சந்தித்த கடினமான சூழ்நிலை குறித்து மனம் திறந்து பேசியதில் ப்ரித்வி ஷா கூறியதாவது : நான் தடைசெய்யப்படுவேன் என்று கனவிலும் கூட நினைக்கவில்லை. தாடையில் இருந்த ஒவ்வொரு நாட்களையும் கடந்து செல்வது மிக கடினமாக இருந்தது. என்னால் செப்டம்பர் 15 வரை எந்த பயிற்சியில் ஈடுபட முடியாத நிலையில் லண்டனுக்கு சென்றேன்.

அதன்பிறகு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதை மனதில் வைத்துக்கொண்டு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் எண்ணத்தை மட்டும் விடாமல் பிடித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது தான் மீண்டும் லண்டனில் இருந்து திரும்பிய எனக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்ய ராகுல் டிராவிட் அழைத்தார். அவரின் ஆலோசனைப்படி நான் அங்கு சென்று பயிற்சி எடுத்துக்கொண்டேன். மேலும் பிட்னஸ்சில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளச் சொல்லி டிராவிட் சில ஆலோசனைகளை வழங்கினார்.

அவரது வழிகாட்டுதலின் படி நடந்து கொண்டதால் இந்தத் தடை காலத்தில் நான் சந்தித்த சோதனைகளை தற்போது கடந்து வந்துள்ளேன். டிராவிட்டின் ஆலோசனைகள் என்னை மனதளவில் திடப்படுத்த உதவியது. மேலும் நெருக்கடியான சூழ்நிலையில் என்னை நேர்த்தியாக கையாண்ட டிராவிட்டுக்கு நன்றி என்று ப்ரித்வி ஷா கூறினார்.

Advertisement