இந்த ஒரு விஷயத்துக்காக பண்ட் எந்த பிராக்டீஸ்ஸும் எடுக்கல. ஆனா அசத்திட்டாரு – பிரவீன் ஆம்ரே பாராட்டு

Pant
- Advertisement -

இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரானது கொரானா காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 29 போட்டிகள் முடிந்துள்ள இத்தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அந்த அணியை அற்புதமாக வழிநடத்தி இறுதிபோட்டி வரை அழைத்துச் சென்ற அந்த அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் அய்யர், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக வெளியேற, அந்த அணியை வழி நடத்தும் கேப்டன் பொறுப்பு இளம் வீரரான ரிஷப் பன்ட்டிற்கு வழங்கப்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில் அற்புதமாக செயல்பட்ட அவர், ஒரு கேப்டனாக தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்.

pant 2

- Advertisement -

இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளரான பிரவீன் ஆம்ரே, ரிஷப் பன்ட்டின் கேப்டன்சியைப் பற்றி ஒரு பேட்டியளித்துள்ளார். அப்பேட்டியில் பேசிய அவர், ரிஷப் பன்ட்டிற்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படும்போது, அதற்காக அவர் எந்த வித முன்னேற்பாடுகளும் செய்யாமல்தான் இருந்தார். எந்த அனுபவமே இல்லாத ஒரு இளம் வீரர் எப்படி டெல்லி அணியை வழிநடத்தப் போகிறார் என்பதைக் காண நாங்கள் ஆவலோடு இருந்தோம். ஆனால் அவரின் கேப்டன்சியின் தன்மை மிக அற்புதமாக இருந்தது. இந்த ஐபிஎல்லில் டெல்லி அணி பெற்றுள்ள மிகப் பெரிய வெற்றியில், பயிற்சியாளர்களை விட அவருக்கே அதிக பங்கு இருக்கிறது.

அவர் அணியை கட்டமதைத்ததும், வீரர்களை சிறப்பான முறையில் பயன்படுத்தியதும்தான் டெல்லி அணியின் இந்த வெற்றிகளுக்கு மிக முக்கிய காரணமக அமைந்துள்ளது என்று அவர் கூறியிருக்கிறார். சென்ற ஆண்டு நடெபெற்ற ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலிருந்தே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பன்ட், குறிப்பாக அணியில் தனக்கு வழங்கப்பட்ட பினிஷர் ரோலை மிக கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். அவரின் இந்த பினிஷர் ரோலை பற்றிய பேசிய பிரவின் ஆம்ரே, டெல்லி அணியில் அனுபவம் வாய்ந்த வீரரான ஷிகர் தவான் அவருடைய பங்களிப்பை நிலையாக வழங்கி வந்தார்.

எனவே டெல்லி அணியில் பினிஷர் ரோல் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது. அந்த இடத்தையும் தன் வசப்படுத்திக்கொண்ட ரிஷப் பன்ட், தன் பொறுப்பை உணர்ந்து அனைத்து போட்டிகளிலும் அணியை இறுதிவரை அழைத்துச் சென்றிருக்கிறார். அவருடன் ஷிம்ரன் ஹெட்மையரும் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு நன்றாக விளையாடினார் என்று அவர் தெரிவித்திருக்கிறார். ஐபிஎல்லுக்கு முன்பாக இங்கிலாந்து தொடரில் காயமடைந்த ஸ்ரேயாஸ் அய்யர், ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார்.

pant

எனவே டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பு, அந்த அணியின் மூத்த வீரர்களான ஷிகர் தவான் அல்லது ரஹானே ஆகியோரில் ஒருவருக்குத்தான் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் 23 வயதேயான ரிஷப் பன்ட்டிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தது டெல்லி அணி நிர்வாகம். ரிஷப் பன்ட்டும் அணி நிர்வகத்தை ஏமாற்றத்திற்கு உள்ளாக்காமல், மிக அற்புதமாக செயல்பட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும் . இத்தொடரில் எட்டு போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 6 போட்டிகளில் வெற்றிபெற்று, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement