- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அடுத்த வருடம் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையை ஜெயிக்க எங்களின் இந்த திட்டம் நிச்சயம் உதவும் – தேர்வுக்குழு தலைவர் பேட்டி

இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக எம் எஸ் கே பிரசாத் உள்ளார். நடந்து முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியும் இவரது தலைமையில் தான் தேர்வு செய்யப்பட்டது. அதில் 4ஆம் நிலை வீரரை சரிசெய்யாமல் அணியை உலகக்கோப்பைக்கு எடுத்துச் சென்றதாக பலரும் இந்திய அணி விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் அதனை திருத்தும் விதமாக தற்போது 2020 டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து இந்திய அணியை தேர்வு செய்துள்ளார் எம் எஸ் கே பிரசாத். அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இளம் வீரர்கள் கொண்ட அணி அங்கு பயணம் செய்து விளையாடுகிறது. இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த தேர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் கூறியதாவது :

- Advertisement -

அடுத்த வருடம் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதனால் அணி வீரர்களின் கலவை மிகவும் அவசியம் என்பதை நடப்பு உலக கோப்பையில் புரிந்துகொண்டோம். எனவே பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக கோப்பை தொடர் துவங்கும் 4 மாதங்களுக்கு முன்பு அணி அவசரஅவசரமாக தயார் செய்து விளையாட வைப்பதை விட ஒரு வருடம் இருக்கும் போது இப்போதிலிருந்து அணியை சமமான நிலையை எடுத்துச் சென்றால் அது நிச்சயம் டி20 உலகக் கோப்பையை வெல்ல உதவும் என்று நினைக்கிறோம்.

இதனால் இப்போதிலிருந்தே தேவையான அளவிற்கு பல இளம் வீரர்களுக்கு நாங்கள் தேவையான அளவு வாய்ப்பளிக்க உள்ளோம். இந்த தேர்வு மூலம் இந்திய அணி மாற்றம் அடையும் என்று உறுதியாக நம்புகிறோம். மேலும் உலக கோப்பையை கைப்பற்றும் என்று நம்புகிறோம் என்று தெரிவுக்குழு தலைவர் பிரசாத் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by