- Advertisement -
ஐ.பி.எல்

Kieron Pollard : நான் நேற்று முன்கூட்டியே இறங்கியதற்கு இதுதான் காரணம் – பொல்லார்ட்

ஐ.பி.எல் தொடரின் 24 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக ராகுல் சதமடித்து 100 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -

பின்னர் 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய மும்பை அணி துவக்கத்தில் விக்கெட்டுகளை தவித்தது. பிறகு இறங்கிய மும்பை அணியின் தற்காலிக கேப்டன் பொல்லார்ட் சிறப்பாக விளையாடி 31 பந்துகளில் 83 ரன்களை குவித்து ஆட்டம் இழந்தார். இதில் 10 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும்.

ஒரு கட்டத்தில் மும்பை அணி எளிதாக தோற்றுவிடும் என்ற நிலையில் இருந்து பொல்லார்ட்டின் நம்பமுடியாத சிறப்பான பேட்டிங்கால் பஞ்சாப் அணியை திணறவைத்தார். சந்திக்கும் பந்துகளை எல்லாம் பவுண்டரிக்கு பறக்கவிட்டு மும்பை அணியை வெற்றபெற வைத்தார். முடிவில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பொல்லார்ட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்க பட்டார்.

- Advertisement -

போட்டி முடிந்த பிறகு பேசிய பொல்லார்ட் கூறுகையில் : இன்று எனது சிறப்பான ஆட்டத்திற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். ஏனெனில் அவரே எனக்கு திறனையும், பலத்தினையும் அளிக்கிறார். அதனாலே என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது. வழக்கமாக பின்வரிசையில் 5 அல்லது 6 இடத்தில் நான் களமிறங்கி விளையாடுவேன்.

ஆனால், நேற்று நான் 4 ஆவது வீரராக களமிறங்க காரணம் மும்பை வான்கடே மைதானம் எனக்கு மிகவும் பிடித்த மைதானம். இந்த மைதானத்தில் பலமுறை நான் விளையாடி உள்ளதால் இந்த மைதானத்தில் எப்போது விளையாடினாலும் நான் மகிழ்ச்சியுடன் பேட்டிங்கை அனுபவித்து விளையாடுவேன்.அதுமட்டுமில்லாமல் ரன்ரேட்டை மனதில் வைத்துக்கொண்டே முன்கூட்டியே களமிறங்கினேன். அதன்படி அணிக்காக சிறப்பாக விளையாடியது மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது என்று கூறினார் பொல்லார்ட்.

- Advertisement -
Published by