- Advertisement -
இந்திய கிரிக்கெட்

9 மாதம் இதற்காகவே காத்திருந்தார். வெற்றியும் பெற்று தந்துவிட்டார். இளம்வீரரை புகழ்ந்த – பொல்லார்ட்

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 287 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பண்ட் 76 ரன்களும், அய்யர் 70 ரன்களும் குவித்தனர். அதன் பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 47.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 291 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேட்டியளித்த மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொல்லார்ட் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : கடந்த 9 மாதங்களாக இவர் நிறையவே சிரமப்பட்டார். மேலும் அவர் சரியாக விளையாடவில்லை என்ற பிரஷர் அவர் மீது இருந்தும் நாங்கள் அணியில் ஹெட்மயரை ஒரு முக்கியமான வீரர் என்பதாலேயே அவரின் திறமையை புரிந்து அவரை கடந்த 18 மாதங்களாக அணியில் வைத்துள்ளோம்.

ஹெட்மையர் நிச்சயம் ஒரு சிறந்த வீரர் தான் என இந்த போட்டியில் அணி நிர்வாகத்திற்கு அவர் தன் திறமையை எடுத்துக் காட்டியுள்ளார். மேலும் எங்களது நிர்வாகத்திற்கு இது ஒரு மிக மகிழ்ச்சியான விடயமாக மாறியுள்ளது. இந்த போட்டியில் ஹெட்மயர் தனது அதிரடியை மீண்டும் காண்பித்துள்ளார். அவரின் இந்த சிறப்பான ஆட்டம் தொடரும் என்று நான் நினைக்கிறேன்.

அதுமட்டுமின்றி வேகப்பந்துவீச்சாளர் காட்ரெல் கடந்த 18 மாதங்களாக மேற்கிந்திய தீவுகள் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எங்கள் அணியில் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் அவர்கள் அனைவரும் சாதிப்பார்கள் இன்றைய வெற்றி எனக்கு மகிழ்ச்சி அளித்தது என்று பொல்லார்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by