அந்த இங்கிலாந்து கேப்டனை பாத்து தான்.. ரோஹித் இந்தியாவை டேஞ்சரா மாத்திருக்காரு.. காலிங்வுட் கருத்து

Paul Collingwood 2
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் செமி ஃபைனல் ஜூன் 27ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் 2022 டி20 உலகக் கோப்பை செமி ஃபைனல் போல இந்தியாவை தோற்கடித்து இங்கிலாந்து வெல்லும் என்று நாசர் ஹுசைன் போன்ற முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்று மற்றொரு முன்னாள் இங்கிலாந்து கேப்டன் பால் காலிங்வுட் தெரிவித்திருந்தார்.

ஏனெனில் தற்போது ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி தங்களுடைய அணுகுமுறையை முற்றிலுமாக மாற்றியுள்ளதாக அவர் கூறியிருந்தார். அதாவது மெதுவாக விளையாடினால் வேலையாகாது என்பதை உணர்ந்த இந்தியா தற்போது ஐசிசி தொடர்களில் எதிரணியை அடித்து நொறுக்க வேண்டும் என்ற தைரியமான அணுகுமுறையை பின்பற்றுவதாக காலிங்வுட் கூறியிருந்தார்.

- Advertisement -

இங்கிலாந்தை பார்த்து:
இந்நிலையில் சொந்த சாதனையைப் பற்றி கவலைப்படாமல் எதிரணிகளை அடித்து நொறுக்க வேண்டும் என்ற அணுகு முறையை ரோகித் சர்மா தற்போதைய இந்திய அணியில் கொண்டு வந்துள்ளதாக காலிங்வுட் பாராட்டியுள்ளார். ஆனால் இந்த அணுகு முறையை இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியை பார்த்து தான் இந்தியா பின்பற்றுவதாக அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“ரோஹித் சர்மாவின் மெசேஜ் தெளிவாக இருக்கிறது என்று நினைக்கிறேன். உடைமாற்றும் அறையிலும் கடந்த செய்தியாளர்கள் சந்திப்பிலும் அவர் சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று சொன்னார். மாறாக அதிக ஸ்ட்ரைக் ரேட் அல்லது போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது பற்றி அவர் பேசினார். இது போன்ற வார்த்தைகள் நம்முடைய கேப்டன் 100% நமக்கு பின்னே இருக்கிறார் என்ற நம்பிக்கையை வீரர்களிடம் ஏற்படுத்தும்”

- Advertisement -

“அது போட்டியில் தாக்கத்தையும் ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது இந்திய அணியில் நான் மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கிறேன். இருப்பினும் இங்கிலாந்தில் 2016இல் இயன் மோர்கன் கேப்டனாக வந்தது முதலே இதை நாங்கள் கடந்த 6, 7 வருடங்களாக பார்த்து வருகிறோம். அவர்கள் முதல் பந்தில் இருந்தே ஆக்ரோசமாக விளையாட வேண்டும் என்ற அணுகுமுறையை பின்பற்றுகின்றனர்”

இதையும் படிங்க: விராட் கோலி 150 கிலோ தூக்கலாம்.. ஆனா இதை வெச்சே ரோஹித் இந்தியாவை ஹேப்பியாக்குறாரு.. கபில் தேவ்

“அது தற்போது மற்ற அணிகள் பின்பற்றுவதற்கு பென்ச்மார்க்காக உருவாகியுள்ளது போல் தெரிகிறது. அதை பின்பற்றும் இந்தியாவும் வித்தியாசமாக இல்லை. எனவே திறமையும் தரமான பேட்ஸ்மேன்களும் இந்திய கிரிக்கெட் கொண்டுள்ளது. அதை வைத்து அவர்கள் மிகவும் பவர்ஃபுல்லான ஆபத்தான அணியாக செயல்படுகிறார்கள்” என்று கூறினார்.

Advertisement