அவர் ஒருத்தர் போதும்.. அதை மாற்றியுள்ள இந்தியா இம்முறை இங்கிலாந்திடம் தோற்க மாட்டாங்க.. பால் காலிங்வுட் 

Paul Collingwood
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் செமி ஃபைனலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்தப் போட்டி ஜூன் 27ஆம் தேதி கயானா நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இதுவரை தோல்வியை சந்திக்காமல் அசத்தி வருகிறது.

குறிப்பாக தங்களுடைய கடைசி சூப்பர் 8 போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடித்து இந்தியா வெற்றி கண்டது. மறுபுறம் ஜோஸ் பட்லர் தலைமையிலான நடப்பு சாம்பியன் இங்கிலாந்து போராடி செமி ஃபைனல் சுற்றுக்கு வந்துள்ளது. அந்த அணியிலும் இந்தியாவை வீழ்த்தும் அளவுக்கு தரமான அதிரடி வீரர்கள் நிறைந்திருக்கின்றனர்.

- Advertisement -

காலிங்வுட் கருத்து:
சொல்லப்போனால் 2022 டி20 உலகக்கோப்பை செமி ஃபைனலில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்த இங்கிலாந்து கடைசியில் கோப்பையும் வென்றது. ஆனால் இம்முறை இங்கிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியை சந்திக்காது என்று முன்னாள் கேப்டன் பால் காலிங்வுட் தெரிவித்துள்ளார். ஏனெனில் தற்போது இந்தியா தங்களுடைய அணுகுமுறையை மாற்றியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் ஜஸ்ப்ரித் பும்ரா 24 பந்துகளில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் கொண்டிருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “உண்மையாக இம்முறை இந்தியா தோல்வியை சந்திப்பதை பார்க்க முடியாது. அவர்களை தோற்கடிக்க இங்கிலாந்து எதையாவது அற்புதமான விஷயத்தை செய்ய வேண்டும். ஏனெனில் இந்தியா சமநிலையுடன் கூடிய அணியை கொண்டுள்ளது”

- Advertisement -

“ஜஸ்ப்ரித் பும்ரா தற்போதைய ஃபார்மில் உள்ளார்கள். ஃபிட்டாக, துல்லியமாக, வேகமாக வீசக்கூடிய அவரிடம் உயர்தரமான திறன் இருக்கிறது. அவரை எதிர்கொள்ள எந்த அணியிடமும் பதில் இருப்பதாக தெரியவில்லை. 120 பந்துகள் கொண்ட இப்போட்டியில் பும்ரா போன்றவர் 24 பந்துகளில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துவார். அமெரிக்காவில் இருந்த கடினமான பிட்ச்களில் கூட இந்தியா தன்னம்பிக்கையுடன் செயல்பட்டது”

“ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமான இன்னிங்ஸ் விளையாடிய ரோஹித் சர்மா போன்ற இந்தியாவின் முக்கிய பேட்ஸ்மேன் ஃபார்முக்கு வந்துள்ளார். 2 அணிகளுமே ஆக்ரோஷமான செயல்முறைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளன. ஒருவேளை கயானா பிட்ச் ஃபிளாட்டாக இருந்தால் இங்கிலாந்தின் கை ஓங்கியிருக்கும். ஒருவேளை அது ஸ்லோவாக இருந்தால் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும்”

இதையும் படிங்க: என்னா மனுஷன்யா.. இந்தியாவுக்காக அவர் மட்டும் தான் டி20 உ.கோ ஜெயிக்க தகுதியானவர்.. ஹபீஸ் வாழ்த்து

“ஆனால் தற்போது இந்தியாவின் அணுகுமுறை மாறியுள்ளது. மெதுவாக விளையாடும் திட்டம் உலகக் கோப்பையை வென்று கொடுக்காது என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். எனவே அவர்கள் சுதந்திரமாக ரிஸ்க் எடுத்து தைரியமாக விளையாட வேண்டும். அது தோல்வியை கொடுத்தால் விமர்சனங்கள் ஏற்படும். ஆனால் உலகக்கோப்பை வெல்வதற்கு நீங்கள் மற்ற அணிகள் செய்வதை விட முன்னோக்கி செயல்படுவதற்கு உங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

Advertisement