நானா இதை பண்ணது? மும்பை அணிக்கு எதிராக செய்த சம்பத்தை நினைத்து ஆச்சரியப்படும் – பேட் கம்மின்ஸ்

cummins
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 26-ஆம் தேதி துவங்கியது ஐபிஎல் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் புதிதாக இணைந்துள்ள லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகள் சிறப்பாக விளையாடி வரும் வேளையில் சாம்பியன் அணிகளான சென்னை மற்றும் மும்பை அணிகள் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து ரசிகர்களை ஏமாற்றி வருகின்றன.

MI vs KKR Pat CUmmins Venkatesh Iyer

- Advertisement -

இந்நிலையில் நடைபெற்று முடிந்த 14-வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் விளையாடியது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த காரணத்தினால் இந்த போட்டியில் மும்பை அணி பலமாக மீண்டு வரும் என்று எதிர்பார்த்த வேளையில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி தோல்வியை சந்தித்தது மிகப்பெரிய பின்னடைவை தந்துள்ளது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணி 161 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட 162 ரன்கள் என்கிற இலக்கை 16 ஓவர்களில் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி சார்பாக பின் வரிசையில் களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 15 பந்துகளில் 56 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது அதிரடி காரணமாக கொல்கத்தா அணி முன்கூட்டியே வெற்றி பெற்றது.

Pat Cummins

இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. அதோடு ஐபிஎல் தொடரில் அதிவேகமாக அரை சதம் அடித்தவர் என்ற பட்டியலில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான கே.எல் ராகுலுடன் அந்த சாதனையை தற்போது கம்மின்ஸ் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது ஆட்டம் குறித்து பேசிய கம்மின்ஸ் கூறுகையில் :

- Advertisement -

இந்த இன்னிங்சில் நான் விளையாடிய விதத்தினை பார்த்து நானே மிகவும் ஆச்சரியப்பட்டேன் என்று நினைக்கிறேன். ஏனெனில் மற்ற பேட்ஸ்மேன்கள் தடுமாறிய வேளையில் நான் விளையாடிய அனைத்து பந்துகளும் சரியாக பேட்டில் பட்டு நீண்ட தூரத்திற்கு சென்றன. இதுபோன்ற இன்னிங்ஸ் என்னிடம் இருந்து வந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதையும் படிங்க : தோனி நடித்த ஐ.பி.எல் விளம்பரம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப திடீர் தடை விதிப்பு – ஏன் தெரியுமா?

இந்த சீசனில் எனது முதல் ஆட்டத்திலேயே இதை செய்தது மிகவும் திருப்தியாக இருக்கிறது. கடந்த ஆண்டை விட தற்போது கொல்கத்தா அணியில் பல மாற்றங்கள் உள்ளன. நிச்சயம் எங்கள் அணி தொடர்ந்து இதைப்போன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என பேட் கம்மின்ஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement