- Advertisement -
ஐ.பி.எல்

தெருக்களில் இறங்க நாங்க இந்தியர்கள் கிடையாது.. இது தான் ஆஸ்திரேலியா.. கேப்டன் பட் கமின்ஸ் பேட்டி

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி மே 26ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற உள்ளது. அதில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளில் கடந்த வருடம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த ஹைதராபாத் இம்முறை பட் கமின்ஸ் தலைமையில் ஃபைனலுக்கு முன்னேறி அற்புதமான கம்பேக் கொடுத்துள்ளது.

கடந்த வருடம் லண்டனில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்த பட் கமின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு எதிரான 2023 ஆஷஸ் கோப்பையை தக்க வைத்து சாதனை படைத்தது. அதை விட 2023 உலகக் கோப்பையில் இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ந்து 10 வெற்றிகளை பெற்று எதிரணிகளை தெறிக்க விட்டதால் கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என்று நம்பப்பட்டது.

- Advertisement -

இதான் ஆஸ்திரேலியா:
ஆனால் அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவை தோற்கடித்த பட் கமின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்தது. அதனாலேயே 20.50 கோடிக்கு ஹைதெராபாத் அணிக்கு கமின்ஸ் வாங்கப்பட்டார். முன்னதாக 2023 ஃபைனலுக்கு முன்பாக இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவோம் என்ற வாயில் சொன்னதை பட் கமின்ஸ் செயலில் காட்டியது வரலாறாக மாறியது.

ஆனால் அப்படி இந்தியாவை தோற்கடித்து தாயகம் திரும்பிய ஆஸ்திரேலிய அணியினருக்கு அங்குள்ள மக்களும் ரசிகர்களும் பெரிய வரவேற்பு வழங்கவில்லை. குறிப்பாக ஏற்கனவே 4 உலகக் கோப்பைகளை வென்று விட்டதால் “இது மற்றொரு வெற்றி அவ்வளவு தான்” என்ற வகையில் ஆஸ்திரேலிய மக்கள் சாதாரணமாக சென்றனர். இந்நிலையில் அது தான் ஆஸ்திரேலியா என்று தெரிவிக்கும் பட் கமின்ஸ் அதுவே இந்தியர்களாக இருந்தால் தெருக்களில் இறங்கி கொண்டாடியிருப்பார்கள் எனக் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் நம்பக்கூடிய கிட்டத்தட்ட அனைத்து வெற்றிகளையும் பெற்றுள்ளோம். எங்கள் அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் சில கோப்பைகளை வென்றுள்ளோம். இது போன்ற கேரியரை கொண்டதற்கு நாங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு திரும்பியதும் எங்களுக்கு பெரிய கொண்டாட்டம் இல்லை. அது தான் ஆஸ்திரேலியா”

இதையும் படிங்க: சஞ்சு சாம்சனின் மூளையற்ற முடிவால் ராஜஸ்தானின் ஃபைனல் கனவு உடைஞ்சுடுச்சு.. டாம் மூடி, சேவாக் விமர்சனம்

“அது மகத்தான அமைதியான இடம். அது கொஞ்சம் வித்தியாசமானது. ஏனெனில் நாங்கள் அனைவரும் வெவ்வேறு மாகாணங்களுக்கு சென்று விட்டோம். ஆனால் நாங்கள் தெருக்களுக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் எல்லோரும் சலசலத்தார்கள். அடுத்த 2 வாரங்கள் தேநீர் குடிப்பதற்காக சென்றால் கூட அங்கே அனைவரும் உலகக் கோப்பை ஃபைனல் பற்றி பேசினர். அது இந்தியா வெற்றி பெற்றால் இங்கே வரிசையாக அமைக்கப்பட்ட தெருக்கள் போல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எங்கள் வெற்றிக்காக நிறைய ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்” என்று ஸ்போர்ட்ஸ்டக் இணையத்தில் கூறினார்.

- Advertisement -