- Advertisement -
ஐ.பி.எல்

பேட் கம்மின்ஸ் எடுத்த திடீர் முடிவு.. வெற்றிக்கு கைகொடுத்த பக்கா பிளான் – மைதானத்தில் நடந்தது என்ன?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டியின் போது விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இந்த நடப்பு 17-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து கொல்கத்தா மற்றும் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி நாளை மார்ச் 26-ம் தேதி சென்னை மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் வடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து இலக்கினை எதிர்த்து விளையாடிய ராஜஸ்தான் அணியானது சன்ரைசர்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே குவித்தது.

அதன்காரணமாக 36 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் எடுத்த ஒரு முடிவு அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது. அந்த வகையில் சுழலுக்கு சாதகமான சென்னை ஆடுகளத்தில் சபாஷ் அகமதுவை சிறப்பாக பயன்படுத்தினார்.

- Advertisement -

பேட்டிங்கில் 18 ரன்கள் எடுத்து கை கொடுத்ததோடு பந்து வீச்சிலும் 4 ஓவர்களை வீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதோடு சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால் அபிஷேக் சர்மாவிற்கும் ஓவரை வழங்கினார். அதன்படி அபிஷேக் ஷர்மாவும் 4 ஓவர்களை வீசி 24 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதையும் படிங்க : இந்த விஷயத்தில் என்னை விட நீ தான் பெஸ்ட்டா வருவன்னு யுவ்ராஜ் சிங்கே பாராட்டுனாரு.. அபிஷேக் சர்மா பேட்டி

இப்படி இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து பேட் கம்மின்ஸ் எடுத்த திடீர் முடிவு அந்த அணியின் வெற்றிக்கு கை கொடுத்தது. ஏனெனில் அவர்கள் இருவருமே சேர்ந்து 8 ஓவர்களில் வெறும் 47 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -