- Advertisement -
ஐ.பி.எல்

கேப்டன்சியில் அப்படியே தோனி மாதிரி முடிவுகளை எடுக்கும் பேட் கம்மின்ஸ் – பயிற்சியாளர் பகிர்ந்த தகவல்

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியானது இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு இரண்டாவது அணியாக முன்னேறியிருந்த சன் ரைசர்ஸ் அணியானது முதலாவது குவாலிபயர் போட்டியில் தோல்வியை சந்தித்தது. அதன் பின்னர் இரண்டாவது குவாலிபயர் போட்டியின் போது ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

ஏற்கனவே 50 ஓவர் உலககோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என அடுத்தடுத்த ஐசிசி கோப்பைகளை வென்ற கேப்டன் பேட் கம்மின்ஸ் தலைமையில் இம்முறை நிச்சயம் ஐபிஎல் கோப்பையை சன்ரைசர்ஸ் அணி கைப்பற்றும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது.

- Advertisement -

பேட் கம்மின்ஸ் கேப்டனாக சில முக்கிய முடிவுகளை எடுப்பது அந்த அணியின் மிகச்சிறப்பான வெற்றிகளை தீர்மானிக்கிறது. இந்நிலையில் அவர் தோனி போன்றே டீம் மீட்டிங்கை நடத்துகிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் அந்த அணியின் பயிற்சியாளர் கூறுகையில் :

பேட் கம்மின்ஸ் ஒரு பிராக்டிக்கலான மனிதர், அவர் மிகவும் நிதானமாக இருப்பார். அதோடு அணியில் உள்ள அனைத்து வீரர்களின் பிரச்சனை மற்றும் எண்ண ஓட்டங்கள் ஆகியவற்றை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றார் போல் திட்டங்களை வகுத்துக் கொடுப்பார். எப்போதும் எதிரணியை பற்றியும் ஆடுகளத்தை பற்றியும் சரியான தரவுகளை தெரிந்து கொள்வார்.

- Advertisement -

அதேநேரம் நேரத்தை வீணடிக்காமல் டீம் மீட்டிங்கை விரைவில் முடித்து விடுவார். குறிப்பாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிபயர் போட்டிக்கு முன்னதாக அணியின் மீட்டிங்கை 35 வினாடிகள் மட்டுமே நடத்தினார். ஒரு சில வினாடிகள் மட்டுமே பேசிய அவர் வீரர்களிடம் இருந்து எவ்வாறு அவர்களது திறனை பெறுவது என்பதை புரிந்து வைத்துள்ளார்.

இதையும் படிங்க : விராட் கோலிக்கு நீங்க அட்வைஸ் பண்ணாதீங்க.. அவர் என்ன செய்வாரு.. தப்பு ஆர்சிபி மேல.. வாசிம் அக்ரம் பதிலடி

அதனாலே அவரால் சிறப்பான கேப்டனாக சிறப்பாக செயல்பட முடிகிறது என அவர் கூறியிருந்தார். தோனி கேப்டனாக இருந்தபோது பெரும்பாலும் டீம் மீட்டிங்கை பெரிய அளவில் நடத்தமாட்டார். அப்படி நடத்தினாலும் ஒரு சில நிமிடங்கள் தான், மற்ற அனைத்தையும் களத்தில் தான் பார்த்துக் கொள்வார். அதேபோன்றே தற்போது பேட் கம்மின்ஸ் அந்த அணியை வழிநடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -