- Advertisement -
ஐ.பி.எல்

தல தோனியின் மாபெரும் சாதனையை சமன் செய்ய தவறிய பேட் கம்மின்ஸ் – விவரம் இதோ

இந்தியாவில் நடைபெற்று வந்த 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நேற்று நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியுடன் நிறைவுக்கு வந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணையை எளிதாக வீழ்த்தி 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -

அதே வேளையில் இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனைகளை குவித்து வந்த சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்தது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று அடைந்த இந்த தோல்வியின் மூலம் கேப்டனாக பேட் கம்மின்ஸ் தோனியின் மாபெரும் சாதனை ஒன்றினை சமன் செய்ய தவறியுள்ளது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தில் ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் ஐபிஎல் கோப்பை என இரண்டையும் வென்ற ஒரே கேப்டனாக எம்.எஸ் தோனி இருந்து வருகிறார். இவ்வேளையில் கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற கம்மின்ஸ் இந்த முறை ஐபிஎல் கோப்பையை வென்று இருந்தால் தோனியின் அந்த சாதனையை சமன் செய்திருப்பார்.

இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியாவின் மனைவி அவரை விட்டு பிரிய மும்பை இந்தியன்ஸ் அணிதான் காரணமா? – என்ன நடந்தது?

ஆனால் இந்த இறுதி போட்டியில் அடைந்த இந்த தோல்வியின் மூலம் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற முடியாமல் போனது மட்டுமின்றி அந்த சாதனையையும் அவரால் சமன் செய்ய முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -