அடுத்தடுத்த மேஜிக்.. டி20யின் மலிங்காவாக.. வேறு யாருமே செய்யாத 2 உலக சாதனை படைத்த கமின்ஸ்

Pat Cummins 2
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் 2024 டி20 உலகக் கோப்பை உச்சக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அதில் ஜூன் 23ஆம் தேதி செயின்ட் வின்சென்ட் நகரில் நடைபெற்ற சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியாவை 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் வெறும் 149 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக முகமதுல்லா குர்பாஸ் 60 இப்ராஹிம் ஜாட்ரான் 51 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா அதிகபட்சமாக பட் கமின்ஸ் 3 கிரிக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த ஆஸ்திரேலியா சுமாராக விளையாடி 126 ரன்கள் ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. அதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் முறையாக வெற்றியைப் பெற்று ஆப்கானிஸ்தான் வரலாறு படைத்தது.

- Advertisement -

ஹாட்ரிக் உலக சாதனை:
அந்த அணிக்கு அதிகபட்சமாக குல்பதின் 4 விக்கெட்டுகள் எடுத்தார். முன்னதாக இந்தப் போட்டியில் 18வது ஓவரின் கடைசி பந்தில் ரசித் கானை 2 ரன்னில் அவுட்டாக்கிய பட் கமின்ஸ் 20வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் கரீம் ஜானத் 13, குல்பதின் நைபை 0 ரன்களில் அவுட்டாக்கினார். அந்த வகையில் 3 பந்துகளில் 3 விக்கெட்டுகள் எடுத்த அவர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை பதிவு செய்தார்.

சொல்லப்போனால் வங்கதேசத்துக்கு எதிரான கடந்த போட்டியிலும் அவர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அடுத்தடுத்த போட்டிகளில் 2 ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்ற உலக சாதனையை பட் கமின்ஸ் அடைத்துள்ளார். இதற்கு முன் லசித் மலிங்கா மட்டுமே 50 ஓவர் உலகக் கோப்பையில் லசித் 2 ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

- Advertisement -

அது போக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அடுத்தடுத்த போட்டிகளில் 2 ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்ற உலக சாதனையையும் பட் கமின்ஸ் படைத்துள்ளார். இதற்கு முன் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே இலங்கைக்கு எதிராக 1999இல் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் அடுத்தடுத்த போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் அடுத்தடுத்த போட்டிகளில் ஹாட்ரிக் எடுத்ததில்லை.

இதையும் படிங்க: சிவனும் சக்தியும் சேர்ந்து ஆஸியை வீட்டுக்கு அனுப்புமா? காத்திருக்கும் அற்புத வாய்ப்பு.. இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆப்பு?

இருப்பினும் இப்போட்டியில் தோல்வியை சந்தித்ததால் ஆஸ்திரேலியா செமி ஃபைனல் செல்வதற்கு அடுத்த போட்டியில் இந்தியாவை தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மறுபுறம் இந்தியா தங்களுடைய கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து வங்கதேசத்தை தங்களது கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தான் வீழ்த்தினால் செமி ஃபைனல் செல்லலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

Advertisement