- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பண்ட் இன்றைய போட்டியில் இப்படி ஒரு சிக்கலுக்கு இடையே தான் காப்பாத்தி இருக்காரு – விவரம் இதோ

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி தற்போது சிட்னி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியின் 2வது இன்னிங்சில் இந்திய அணிக்கு 407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கினை ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தது. அதன்படி விளையாடிய இந்திய அணி துவக்கத்தில் ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோரது விக்கெட்டை நான்காம் நாள் ஆட்டத்தின் முடிவில் இழக்க மீதமுள்ள 8 விக்கெட்டுகளை ஐந்தாவது நாள் ஆட்டத்தில் எளிதாக எடுத்து ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என்று கூறப்பட்டது.

இதனால் இந்த போட்டியில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்திய அணி 200 ரன்களை தாண்டாது என்று அறிக்கை விட்டிருந்தார். அதனை தவிர்க்கும் வகையில் இன்று இந்திய அணியின் ஐந்தாவது வீரராக களமிறங்கிய ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

118 பந்துகளை சந்தித்த அவர் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் என 97 ரன்கள் விளாச ஒரு கட்டத்தில் வெற்றிக்கு அருகில் அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 97 ரன்கள் எடுத்தபோது லயனின் பந்தை அடிக்க முயன்ற ரிஷப் பண்ட் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். அதன்பின்னர் விகாரி மற்றும் அஸ்வின் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை டிராவை நோக்கி அழைத்துச் சென்றனர்.

கிட்டத்தட்ட 42 ஓவர்கள் கூட்டணி அமைத்து அவர்கள் இந்திய அணியை வெற்றிகரமாக டிராவுக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் இந்த போட்டியின்போது பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறிதளவு பயமின்றி துணிச்சலாக ஆடியோ ரிஷப் பண்டின் ஆட்டம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது, மேலும் இந்த ஆட்டத்திற்கு அவர் வாழ்த்துகளை பெற்று வந்தாலும் இதன் பின் உள்ள சுவாரசியம் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி முதலாவது இன்னிங்சில் இடது முழங்கையில் அடிவாங்கிய ரிஷப் பண்ட் கீப்பிங் செய்ய வரவில்லை. எனவே 2 ஆவது இன்னிங்ஸில் போது அவர் விளையாடமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஹாரிக்கு முன்னதாக களமிறங்கி அவர் விளையாடிய இந்த அதிரடி ஆட்டம் ஆஸ்திரேலிய அணிக்கு சற்று பயத்தை உண்டாக்கியது என்று கூறலாம். அவரின் இந்த ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by