பாவம் பாண்டியாவுக்கு வந்த நிலைமையை பாருங்க. நடக்ககூட இன்னொருவர் உதவிசெய்றாங்க – வீடியோ இதோ

Pandya

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் ஆன ஹர்திக் பாண்டியா கடந்த ஆசிய கோப்பை போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவ்வப்போது கஷ்டப்பட்டு வந்தார். இந்த காயத்தின் தீர்வுக்காக இந்திய மருத்துவர்கள் அவரை லண்டன் மருத்துவமனைக்கு சென்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள சொன்னார்கள்.

உடனே தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய பாண்டியா தற்போது லண்டன் சென்று அங்குள்ள மருத்துவர்கள் மூலம் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடித்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார். அனைவரும் அவருக்கு விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் சொல்லிவந்த இந்நிலையில் தற்போது ஹர்டிக் பண்டியா ஆபரேஷனுக்கு பிறகு நடக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் குழந்தைபோல ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கும் அவர் இன்னொருவர் உதவியோடு நடக்கிறார். பின்முதுகில் ஆப்பரேஷன் செய்திருக்கும் பாண்டியாவால் சரியாக நிற்க கூட முடியவில்லை ஒருவருடன் உதவியோடு அவர் எங்கும் செல்லும் நிலைமை தற்போது உள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு வருத்தத்தை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இருபினும் விரைவில் நான் முழு ஃபிட்னஸ் பெற்று இந்திய அணிக்கு திரும்புவேன் என்று பாண்டியா பதிவிட்டுள்ளார்.