- Advertisement -
ஐ.பி.எல்

சச்சின் விக்கெட்டை எடுத்தால் ஸ்பெஷல் கிப்ட். டீம் ஓனரே வந்து சொன்னாரு – பிரக்யான் ஓஜா பகிர்ந்த தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள இந்த ஓய்வு நேரத்தில் முன்னணி வீரர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் தங்களது கிரிக்கெட் குறித்த அனுபவங்களையும், சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஐபிஎல் வீரருமான பிரக்யன் ஓஜா சச்சின் விக்கெட் வீழ்த்தியது தொடர்பான ஒரு சுவாரஸ்யமான விடயத்தை பகிர்ந்துள்ளார்.

சச்சின் விக்கெட்டை வீழ்த்துவது என்பது ஒவ்வொரு பவுலரின் கனவாக இருக்கும் என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. உலகின் தலை சிறந்த வீரரை வீழ்த்துவது யாருக்கு தான் பிடிக்காமல் போகும். அந்த வகையில் பிரக்யான் ஓஜா சச்சின் டெண்டுல்கர் விக்கெட்டை வீழ்த்திய சம்பவம் குறித்து தற்போது பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அதன்படி விஸ்டன் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள அவர் 2009ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிய போது எதிர் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான சச்சினை வீழ்த்திய சம்பவம் குறித்து தற்போது மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : டர்பனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டெக்கான் சார்ஜர்ஸ் விளையாட இருந்தது.

அந்த போட்டிக்கு முன்பாக என் அறைக்கு வந்த அணி உரிமையாளர்களில் ஒருவர் என்னிடம் வந்து நீ இந்த போட்டியில் சச்சினை வீழ்த்தினால் உனக்கு நிச்சயம் ஸ்பெஷல் கிப்ட் நான் வழங்குவேன் என்று எனக்கு உறுதி அளித்தார். அவர் என்னுடன் நெருக்கமானவர் என்பதால் என்னிடம் வந்து அவ்வாறு கூறிவிட்டு சென்றார்.

- Advertisement -

எனக்கு வாட்ச் என்றால் மிகவும் பிரியம். எனவே நான் சச்சினை வீழ்த்தினால் எனக்கு வாட்ச் வாங்கி தருவீர்களா என்று கேட்டேன். அவரும் தருகிறேன் என்று கூறி சென்றார். பிறகு அந்த போட்டியில் சச்சினை நான் வீழ்த்தினேன். அணி உரிமையாளரும் தான் வாக்களித்தது போலவே ஒரு விலை உயர்ந்த வாழ்க்கை வாட்சை பரிசாக வழங்கினார். சச்சின் டெண்டுல்கர் விக்கெட் வீழ்த்தியது ரொம்ப ஸ்பெஷலான தருணம்.

அதன்பிறகு நான் எந்த ஒரு வீரருக்கும் எதிராக விக்கெட் வீழ்த்த முடியும் என்ற தன்னம்பிக்கையை தனக்கு கொடுத்ததாக தெரிவித்துள்ளார். ஓஜா குறிப்பிட்ட அந்த போட்டியில் சச்சின் விக்கெட் மட்டுமின்றி டுமினி மற்றும் தவான் ஆகியோர் கிரிக்கெட்டையும் வீழ்த்திய அவர் அந்த போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by