நான் அடித்த சதத்தை உயிரிழந்த என் நண்பனுக்கு அர்ப்பணிக்கிறேன் ரோகித் உருக்கம்..! – நண்பனை பார்த்த ஆச்சிரியபடுங்க..!

sharma

இந்திய அணியில் ஹிட் மேன் என்றழைக்கபடும் ரோஹித் ஷர்மா கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 8) இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் 55 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இந்த சதத்தை தனது நண்பருக்கு அர்பணிப்பதாக ரோஹித் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.
rohit
இந்த அணியின் துவக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா இதுவரை இரண்டு இரட்டை சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர். அதே போல சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் குவித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் பெற்றவர்.

ரோஹித் ஷர்மா எப்போது சதமடித்தாலும் அதனை தனது மனைவி ரிதிக்காவிற்கு தான் அர்பணிப்பார். கடந்த ஞாயிற்று கிழமை நடந்த போட்டி முடிந்து பின்னர் ரோஹித் ஷர்மாவை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஒரு ஜாலி பேட்டி ஒன்றை எடுத்தார்.அப்போது பேசிய ரோஹித் “. நான் சதமடித்த போது அவர் இங்கு இல்லாமல் போனது சற்று வருத்தத்தை தருகிறது. ஆனால் பரவாயில்லை, இனிவரும் போட்டிகளில் அவர் இங்கு இருப்பார்” என்று தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரோஹித் “நேற்றைய போட்டியில் அடித்த சதத்தை உயிரிழந்த என்னுடைய நண்பன் சுதனுக்கு அர்ப்பணிக்கிறேன். இந்த உலகை ஒரு சிறப்பான இடமாக மற்ற நாம் அனைவரும் முயற்சிப்போம்” என்று தெரிவித்திருந்தார். சுதன் என்பது வேறு யாரும் இல்லை , உலகின் கடைசி வெள்ளை காண்டாமிருகம் தான். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது’ .