எங்களுக்கு பிளேஆப் சுற்று வாய்ப்பு இருக்கு..! தோல்விக்கு காரணம் சொன்ன ரஹானே

Rahane
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 49 வது லீக் போட்டி கொல்கத்தா, ஹெடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா மாறும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டியாக இருந்த இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தது. இருப்பினும் பிளே ஆப் சுற்றிற்கு தகுதி பெரும் வாய்ப்பு இன்னும் எங்கள் அணிக்கு இருப்பதாக அந்த அணியின் கேப்டன் ரஹானே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

rahane2

- Advertisement -

நேற்று (மே 15 ) நடந்த இந்த போட்டியில் புள்ளிபட்டியலில் 3, 4 ஆகிய இடங்களில் இருந்த கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இந்த இரு அணிகளும் ஏற்கனவே 12 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வென்று சம பலத்தில் இருந்தது .நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கல் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்களை எடுத்தது,

இதையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய கொல்கத்தா அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. இந்த இரண்டு அணிகளும் பிளே ஆப் சுற்றிற்ற்கு நுழைய சரிக்கு சமமான வாய்ப்பு இருந்த நிலையில், இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3 வது இடத்திற்கு முன்னேறியது.

Rahane

இந்த போட்டிக்கு பிறகு பேட்டியளித்த ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பேசுகையில் ” இந்த போட்டியில் எங்கள் அணி எடுத்திருந்த ரன் போதுமானதாக இல்லை, நாங்கள் ஒரு 180 ரன்களுக்கு மேல் எடுதிருக்க வேண்டும். ஆனால் 142 ரன்களை மட்டும் எடுத்து தோல்வியடைந்து விட்டோம். இருப்பினும் எங்கள் அணிக்கு பிளே ஆப் சுற்றில் நுழையும் வாய்ப்பு இருக்கிறது. எங்கள் அணியின் கடைசி லீக் போட்டி எங்கள் சொந்த மண்ணான ஜெய்ப்பூரில் நடக்கவிருக்கிறது அதில் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று” நம்பிக்கை தெரிவித்துள்ளர் “

Advertisement