14 மேட்ச்சும் அவரைபத்தி பேசிட்டேன். இனிமே அவரைப்பத்தி உலகம் பேசும் – இளம்வீரரை வாழ்த்திய நிதீஷ் ராணா

Rana-Rinku
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 68-வது லீக் போட்டியானது நேற்று இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் க்ருனால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்றைய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

KKR vs LSG

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் லக்னோ அணி சார்பாக அதிரடியாக விளையாடிய பூரான் 58 ரன்கள் குவித்தார். பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 175 ரன்கள் மட்டுமே குவித்தது.

அதன் காரணமாக கொல்கத்தா அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி சார்பாக இறுதி வரை போராடிய ரிங்கு சிங் 67 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் நிதீஷ் ராணா கூறுகையில் :

Rinku Singh

இந்த போட்டியில் வெற்றி எங்கள் வசம் வரவில்லை. இருந்தாலும் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியதாக நினைக்கிறோம். இந்த தொடர் முழுவதுமே எங்களுக்கு சற்று சவாலாக இருந்தது. டாப் 4 அணிகளில் இருக்கும் தகுதி எங்களிடம் இருந்தும் நாங்கள் அந்த இடத்தை தவற விட்டதாக நினைக்கிறோம். ஐபிஎல் போன்ற உலகின் மிகச்சிறந்த லீக் தொடரில் முதல் நான்கு இடங்களில் இடம் பிடிக்க அனைத்து வகையான துறையிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

- Advertisement -

இம்முறை நாங்கள் சில தவறுகளை செய்து இருந்தாலும் இதனை நிவர்த்தி செய்து நிச்சயம் அடுத்த தொடரில் மிகச் சிறப்பாக திரும்புவோம் என நிதீஷ் ராணா கூறினார். மேலும் ரிங்கு சிங் குறித்து சில கருத்துக்களை பகிர்ந்த அவர் : 14 போட்டிகளாக நான் அவரைப் பற்றி பேசி விட்டேன். இது இனிமேல் அவரைப் பற்றி பேச என்னிடம் வார்த்தை இல்லை.

இதையும் படிங்க : MI vs SRH : முக்கிய போட்டியில் மும்பையை பந்தாடிய மயங் அகர்வால் – 15 வருட ஆல் டைம் தனித்துவ ஐபில் சாதனை படைத்த இளம் வீரர்

தனிப்பட்ட முறையில் அவரது ஆட்டம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நிச்சயம் உலகம் அவரது ஆட்டத்தை பார்த்திருக்கும் கண்டிப்பாக இனி அவரை உலகமே வாழ்த்தும் என ரிங்கு சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement