20 ரன்ஸ்.. ஒரே ஓவரில் 5 சிக்ஸ்.. ஃசெல்ப் எடுக்காத இலங்கை.. டி20 உ.கோ வேலையை ஆரம்பித்த நெதர்லாந்து

- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் துவங்க உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தயாராகும் வகையில் பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் மே 28ஆம் தேதி லாடர்ஹில் நகரில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிய பயிற்சி போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் வந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து அணி 20 ஓவரில் சிறப்பாக விளையாடி 181/5 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக மைக்கேல் லெவிட் 55, தேஜா நிதமனரு 27 ரன்கள் ரன்கள் எடுத்தனர். நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக தில்சன் மதுசங்கா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறினர்.

- Advertisement -

அசத்திய நெதர்லாந்து:
குறிப்பாக அசலங்கா, குசால் மெண்டிஸ், நிசாங்கா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் நெதர்லாந்த அணியின் தரமான பந்து வீச்சில் குறைவான ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் தோல்வியின் பிடியில் சிக்கிய அந்த அணிக்கு கேப்டன் வணிந்து ஹசரங்கா அதிரடியாக ஒரே ஓவரில் அடுத்தடுத்த 5 சிக்சர்கள் அடித்து 43 ரன்கள் விளாசி போராடி அவுட்டானார்.

ஆனால் மறுபுறம் தனஞ்செயா டீ சில்வா 31 ரன்கள் எடுத்தார். அவரை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறியதால் 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை வெறும் 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக ஆர்யன் தத் 3, கெய்ல் க்ளென் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள்.

- Advertisement -

அதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நெதர்லாந்து உலகக் கோப்பையை வெற்றியுடன் துவக்கியது. குறிப்பாக 2014 டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணியை தோற்கடித்து நெதர்லாந்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. சொல்லப்போனால் கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து அசத்திய நெதர்லாந்து ரசிகர்களின் பாராட்டை பெறும் அளவுக்கு அற்புதமாக விளையாடியது.

இதையும் படிங்க: வெறும் 2 நாள் தான்.. உங்க 2 பேருக்கும் இதான் வாழ்நாளின் கடைசி சான்ஸ்.. விராட், ரோஹித்தை எச்சரித்த கைப்

அதைத் தொடர்ந்து தற்போது டி20 உலகக் கோப்பையிலும் நெதர்லாந்து தங்களுடைய திறமையை காண்பிக்க துவங்கியுள்ளது. மறுபுறம் ஒரு காலத்தில் சாம்பியன் அணியாக இருந்த இலங்கை தற்போது நெதர்லாந்திடம் பயிற்சி போட்டியில் செல்ப் எடுக்காமல் தோற்கும் அளவுக்கு திண்டாடி வருகிறது. அதனால் இம்முறையும் கோப்பையை வெல்ல முடியாதா என்று இலங்கை ரசிகர்கள் இப்போதே கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement