எதை தூக்கி போட்டாலும் அவர் அசரமாட்டாரு.. லேட்டா வந்துருக்கும் இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்தும்.. நாசர் ஹுசைன்

Nasser Hussain 2
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் 2வது செமி ஃபைனலில் இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன. அப்போட்டி வெஸ்ட் இண்டீஸில் உள்ள ஜூன் 27ஆம் தேதி கயானா நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியாவை 2022 டி20 உலகக் கோப்பை செமி ஃபைனல் போலவே 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்கடிக்கும் என்று நாசர் ஹுசைன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய ரோஹித் சர்மா இப்போட்டியில் அதிரடியாக விளையாடுவதற்கும் இதுவரை அசத்தாத விராட் கோலி இங்கிலாந்தை அடிப்பதற்கும் வாய்ப்புள்ளதாக நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். ஆனால் எந்த வகையான அட்டாக்கை செய்தாலும் அதையெல்லாம் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் சமாளிப்பார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இங்கிலாந்து வெல்லும்:
அத்துடன் ஐசிசி தொடர்களில் சந்தித்த தொடர் தோல்விக்குப் பின் கடந்த சில வருடங்களாக மட்டுமே இந்தியா அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை பின்பற்றுவதாக நாசர் ஹுசைன் கூறியுள்ளார். ஆனால் இங்கிலாந்து அதற்கு முன்பாகவே அதிரடியாக விளையாடத் துவங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இத்தொடரில் இந்தியா இதுவரை சோதிகப்பமாக சோதிக்கப்படவில்லை என்பதால் இங்கிலாந்து வெல்லும் என்று உறுதியாக தெரிவிக்கும் அவர் இது பற்றி டெய்லி மெயில் பத்திரிகையில் கூறியுள்ளது பின்வருமாறு. “ஒருவேளை இந்தியாவுக்காக ரோஹித் அட்டகாசமான துவக்கத்தை கொடுத்தாலோ – இதுவரை அசத்தாத விராட் கோலி இந்தப் பெரிய போட்டியில் உயர்ந்து வந்தாலோ இங்கிலாந்துக்கு பிரச்சனை ஏற்படும். ஆனால் இந்தியா எதை வீசினாலும் அதற்காக பட்லரின் அணி பதறாது”

- Advertisement -

“வெற்றி பெறுவதற்கு சிறந்தவற்றை கொடுக்க வேண்டும் என்பதை தாண்டி அதுவே மற்றொரு உலகக் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இங்கிலாந்துக்கு கொடுக்கும். அதே சமயம் இப்போட்டியில் சவால் நீண்டதாக இருக்கும். ஏனெனில் இந்த தொடரில் இந்திய அணி பாகிஸ்தானால் ஒரு முறை மட்டுமே சோதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சூழ்நிலைகளுக்கு தங்களை உட்படுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர்கள் நீண்ட காலமாக தங்கள் அணுகுமுறையை மதிக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்”

இதையும் படிங்க: அந்த இங்கிலாந்து கேப்டனை பாத்து தான்.. ரோஹித் இந்தியாவை டேஞ்சரா மாத்திருக்காரு.. காலிங்வுட் கருத்து

“அவர்கள் மிகவும் தாமதமாகத்தான் இந்த அணுகுமுறையை பிடிக்க முடிவு செய்துள்ளனர். ஒருபக்கம் முரட்டுத்தனமான அணியாக இருந்தாலும் இந்தியா தங்கள் பரந்தத் திறமையை வெள்ளிக் கோப்பையை வெல்லும் அளவுக்கு மொழிபெயர்க்கவில்லை என்பதை சுட்டிக்காட்டுவது நியாயமானது. ஆம் 2023 உலகக் கோப்பை இங்கிலாந்துக்கு சரியாக போகவில்லை. ஆனால் அத்தொடரில் இரட்டை உலக சாம்பியனாக அவர்கள் சென்றனர். இங்கேயும் டி20 உலகக் கோப்பையில் தக்க வைக்க அவர்களுக்கு 2 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளது” என்று கூறினார்.

Advertisement