அந்த மேட்ச் மாதிரி இம்முறையும் இந்தியாவை அடிச்சு நொறுக்கி இங்கிலாந்து ஜெய்க்கும்.. நாசர் ஹுசைன் எச்சரிக்கை

Nasser Hussain
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய செமி ஃபைனலில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. வெஸ்ட் இண்டீஸில் உள்ள கயானா நகரில் ஜூன் 27ஆம் தேதி நடைபெறும் அப்போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா வெல்லும் இன்று ரசிகர்கள் நம்புகின்றனர். ஏனெனில் இத்தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்தியா முக்கிய போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது.

அத்துடன் இம்முறை ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப், குல்தீப், அக்சர் படேல், ஹர்டிக் பாண்டியா ஆகியோரால் இந்திய அணியின் பவுலிங் நன்றாக இருக்கிறது. அதே போல பேட்டிங்கிலும் விராட் கோலியை தவிர்த்து ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். இந்நிலையில் 2022 டி20 உலகக் கோப்பை செமி ஃபைனலில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் அடித்து நொறுக்கிய இங்கிலாந்து வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்தியாவுக்கு எச்சரிக்கை:
அந்த வகையில் தற்போதும் இந்திய அணியை கண்டு இங்கிலாந்து பயப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார். எனவே அதே போல இம்முறையும் இந்தியாவை வீழ்த்தி ஃபைனலில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

“ஃபைனலில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் என்று நான் கருதுகிறேன். அடிலெய்ட் நகரில் நடைபெற்ற கடந்த செமி ஃபைனலில் இங்கிலாந்து அடித்து நொறுக்கிய விதம் எனக்கு நினைவுக்கு வருகிறது. இம்முறையும் அது ரிப்பீட்டாகும் என்று நான் சொல்வேன். பிட்ச் ஸ்லோவாக இல்லாத வரை இந்த இங்கிலாந்து அணி இந்தியாவை கண்டு பயப்படும் என்று நான் நினைக்கவில்லை”

- Advertisement -

“அமெரிக்காவுக்கு எதிராக பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாக நின்று வந்த போது கூட பட்லர் மற்றும் சால்ட் ஆகியோர் அடித்து நொறுக்கினார்கள். இருப்பினும் அவர்களின் பேட்டிங் பாதிக்கப்படக்கூடியதாக தெரிகிறது. அது இந்தியாவின் கையில் பெருமளவில் விளையாடும். எனவே பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாக இருக்கும் போது அவர்களின் பேட்டிங் பாதிக்கப்படலாம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றியை தெருவில் இறங்கி கொண்டாடும் அந்நாட்டு மக்கள் – ஏன் தெரியுமா?

அதே நிகழ்ச்சியில் மற்றொரு முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் ஆதர்டன் கூறியது பின்வருமாறு. “இந்தியா வெற்றிக்கு போதுமானதாக இல்லை என்று நாசர் நினைக்கிறார். நானும் இந்தியாவை கயானாவில் இங்கிலாந்து தோற்கடிக்கும் என்று நினைக்கிறேன். ஆப்கானிஸ்தானுக்கு சவாலான அணியாக தென்னாப்பிரிக்கா செயல்படும். எனவே தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஃபைனலில் மோதும்” என்று கூறினார்.

Advertisement