- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரிஷப் பண்ட் மோசமாக விளையாடுவதற்கு இவரே காரணம். அந்த பிரஷர் தான் காரணம் – எம்.எஸ்.கே பிரசாத்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். இந்த காலகட்டத்தில் தோனிக்கு பதிலாக இந்திய அணி முதன்மை விக்கெட் கீப்பராக இளம் வீரரான ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டார். துவக்கத்தில் டெஸ்ட் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பண்ட் அதற்கடுத்து வந்த ஒரு நாள் தொடரிலும், டி20 தொடரிலும் தனது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

பேட்டிங் மட்டுமின்றி விக்கெட் கீப்பிங்கிலும் படு மோசமாக விளையாடி கடும் விமர்சனத்திற்கு உள்ளான அவர் ரசிகர்களிடையே அதிகம் விமர்சிக்கப்பட்டும் வருகிறார். இருப்பினும் அவருக்கு இந்திய நிர்வாகம் தொடர்ந்து ஆதரவளித்து வாய்ப்புகளை அளித்து வருகிறது. மேலும் அவர் இளம் வயதுடையவர் என்பதால் அவருக்கு தற்போது ஆதரவு தேவை என்பதால் தொடர்ச்சியாக அணியில் நீடிக்க வைத்துள்ளது.

- Advertisement -

அவர் அணியில் நீடித்தாலும் தற்போது ராகுல் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடருக்கு விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். இருப்பினும் அவர் வரும் காலத்தில் இந்தியாவிற்கு கீப்பராக தொடர்வார் என்று தெரிகிறது. ஆனால் பண்ட் விக்கெட் கீப்பராக தேர்வான சமயத்தில் அவர் தோனியுடன் ஒப்பிட்டுப் பேசும் அளவிற்கு இருந்தார். மேலும் தோனியின் அளவிற்கு இவர் இணையாக இருப்பாரா என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில் பண்டின் இந்த மோசமான செயல் பாட்டிற்கு காரணம் என்ன என்பது குறித்து முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : பண்ட் ஒவ்வொரு முறையும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. அது யாதெனில் தோனி என்ற பெரிய வீரனுக்கு மாற்று வீரராக களமிறங்கி விளையாடிவருகிறார்.

- Advertisement -

அதனால் தோனியுடன் அவர் ஒப்பிடப்பட்டும் வருகிறார். இதனால் ஒவ்வொரு முறை அவர் பேட்டிங் செய்ய வரும் போதும் கீபிங் செய்ய வரும்போது களத்தில் அவர் மிகப்பெரிய அழைத்தத்தை சந்திக்கிறார். ஒரு சிறிய தவறை அவர் செய்தாலும் விமர்சிக்கப்படுகிறார். இதனால் அவர் மனநிலையை பதட்டமாகவும் தயக்கமாவும் வைத்து கொள்கிறார்.

இப்படி இருப்பதாலேயே அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. ஆனால் அதிலிருந்து பல முறை நாங்கள் அவரை வெளியே வரும்படி கூறினோம். அவர் அதிலிருந்து விடுபட தொடர்ந்து முயற்சித்து வருகிறார். அவருடைய இயல்பான ஆட்டத்தை ஆடினால் நிச்சயம் இந்திய அணியில் சிறப்பாக அவர் விளையாடுவார் என்று பிரசாத் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by