தேர்வுக்குழுவிற்கு தலைவர். ஆனாலும் தோனியின் ரசிகன். அவரது எதிர்காலம் இதுதான் – எம்.எஸ்.கே பிரசாத் ஓபன் டாக்

Prasad
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் எந்தவித போட்டியிலும் இதுவரை விளையாடவில்லை. அதன் பின்னர் இந்திய அணி தொடர்ச்சியாக பல்வேறு தொடர்களில் விளையாடி வந்தாலும் கடந்த ஆறு மாதங்களாக எந்த ஒரு போட்டியிலும் தோனி பங்கேற்காததால் ஒப்பந்த வீரர்களுக்கான பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டது. இதனால் தோனி இனிமேல் விளையாடுவது சந்தேகம் என்ற தகவலும் எழுந்துள்ளது.

dhoni

- Advertisement -

தோனியின் எதிர்காலம் குறித்து அண்மையில் பேசிய இந்திய அணி பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுகையில் : ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இது எல்லோருக்கும் தெரியும், அவருக்கும் தெரியும். தேர்வாளர்களுக்கும் தெரியும் என்று தோனியின் இடம் குறித்து சூசகமாக தனது கருத்தினை தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது தேர்வுக் குழுவின் தலைவரான எம்எஸ்கே பிரசாத் அவர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ளது. மேலும் இம்மாத இறுதிக்குள் இந்திய அணிக்கு புதிய தேர்வுக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்றும் கங்குலி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது தேர்வுக்குழு தலைவராக எம்எஸ்கே பிரசாத் தோனி குறித்து ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அதில் தோனியின் எதிர்காலம் குறித்து அவர் கூறியதாவது :

Dhoni

நான் தோனியின் ஒரு மிகப்பெரிய ரசிகர். இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவை பொருத்தவரை 2020 மற்றும் 2021 ஆண்டு என தொடர்ந்து 2 டி20 உலககோப்பை அடுத்தடுத்து வருவதால் தோனியிடம் இருந்து நகர்ந்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுவிட்டது. இதனால் தோனி ஓய்வு பெறும் விருப்பம் தனிப்பட்டதாக இருக்கலாம். ஆனால் தேர்வுக்குழு உறுப்பினர்கள் பதவியை ஓரங்கட்டி விட்டால் நானும் தோனியின் மிகப்பெரிய ரசிகன்.

Dhoni-1

தோனி தனது கிரிக்கெட் பயணத்தில் எட்டாத உயரம் இல்லை. இரண்டு உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டெஸ்டில் நம்பர் ஒன் என அனைத்தும் வென்ற ஒரு வீரர். அதனால் அவரை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஓய்வு பெறுவது அவரது தனிப்பட்ட விருப்பம் இருப்பினும் தேர்வுக் குழு உறுப்பினராக எங்களின் பணியில் அடுத்த தலைமுறை வீரர்கள் கண்டறிந்து அவர்களை வாய்ப்பு வழங்குவது தான் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தோனிக்கு இனி அணியில் வாய்ப்பில்லை என்பதனை அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement