- Advertisement -
ஐ.பி.எல்

எனக்கு பயமில்லன்னு எல்லாரும் நெனைக்குறாங்க.. ஆனா அது உண்மை இல்ல – தோனி பகிர்ந்த சுவாரசியம்

ரசிகர்கள் மத்தியில் மிஸ்டர் கூல் என்ற பெயரை எடுத்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி அழுத்தமான நேரத்தில் அமைதியாக இருந்து சிறந்த முடிவுகளை எடுக்கும் தன்மைக்கே உரித்தானவர். அவரது கேப்டன்சி பல்வேறு முன்னாள் கேப்டன்களையும் அசர வைத்துள்ள வேளையில் அவருக்கு மிகவும் கூலான கேப்டன் என்கிற பெயரும் உண்டு.

அந்த அளவிற்கு களத்தில் தனது அமைதியான நடவடிக்கையின் மூலம் கவனத்தை ஈர்க்க கூடியவர். மேலும் எப்பேற்ப்பட்ட போட்டியாக இருந்தாலும் களத்தில் எவ்வித உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல் சிறந்த முடிவுகளை எடுக்கக் கூடியவர் என்றும் அச்சமின்றி விளையாட கூடியவர் என்றும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு அதிக புகழ் உண்டு.

- Advertisement -

அதோடு பேட்டிங்கிலும் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் பவுலர்களுக்கு பயத்தை உண்டாக்கும் தோனி பயமற்ற பேட்டிங்கை செய்பவர் என்றும் பாராட்டப்படுபவர். ஆனால் சமீபத்தில் தோனி அளித்து வரும் சில பேட்டிகள் இணையத்தில் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இவ்வேளையில் தற்போது தான் பயம் அற்றவன் கிடையாது.. எனக்கும் பயம் உண்டு என தோனி பேசியுள்ள சில விடயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தோனி பேசியிருக்கும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டதாவது :

- Advertisement -

பயம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. உங்களுக்கு அந்த பயம் எப்போதும் இருக்க வேண்டும். ஒருவேளை எனக்கு பயம் இல்லை என்றால் என்னால் ஒருபோதும் தைரியமாக இருக்க முடியாது. என்னை பொறுத்தவரை பயமும் அழுத்தமும் எனக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அவை எல்லாவற்றையும் வைத்து தான் நான் சரியான முடிவுகளை எடுத்து வருகிறேன்.

இதையும் படிங்க : 124/5 டூ 138க்கு ஆல் அவுட்.. வங்கதேசத்தின் வெற்றியை பறித்த அமெரிக்கா.. உறுப்பு நாடுகளில் புதிய உலக சாதனை வெற்றி

என்னை பயமற்றவன் என்று நிறைய பேர் சொல்கிறார்கள். ஆனால் நான் அப்படி இல்லை ஒருவர் பயம் இன்றி இருந்தால் பொறுப்பற்றவராக இருப்பார். ஒருவேளை எனக்கு எந்த பயமும் இல்லாமல் இருந்தால் நான் சாதாரண விஷயங்களை கூட மதிக்க மாட்டேன். ஆனால் எனக்குள் இருக்கும் பயமும், அழுத்தமும் தான் என்னை சரியான முடிவுகளை எடுக்க வைக்கிறது என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -