- Advertisement -
இந்திய கிரிக்கெட்

என்னோட இதயத்தையே எகிற வெச்சுட்டீங்களேப்பா.. பிறந்தநாள் பரிசுக்கு நன்றி.. இந்திய அணியை வாழ்த்திய தோனி

ஐசிசி 2024 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்துள்ளது. இந்த வருடம் ஆரம்பம் முதலே தோல்வியை சந்திக்காமல் வெற்றி நடை போட்ட இந்தியா ஜூன் 27ஆம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.

அதிகபட்சமாக விராட் கோலி 76, அக்சர் அப்டேல் 47, துபே 27 ரன்கள் அடித்தனர். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த தென்னாபிரிக்கா 20 ஓவரில் 169/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கிளாசின் 52 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

வாழ்த்திய தல:
அதனால் 2007க்குப்பின் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்று இந்தியா சரித்திரம் படைத்தது. அத்துடன் 2013க்குப்பின் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வந்த வேதனை தோல்விகளையும் உடைத்து இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது. கடைசியாக ஜாம்பவான் தோனி தலைமையில் அந்த 2 வெற்றிகளையும் இந்தியா பெற்றிருந்தது.

அதன் பின் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா தொடர்ச்சியாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்தது. இருப்பினும் மனம் தளராத இந்திய அணி தோல்வி தற்போது வரலாற்றை உடைத்து புதிய சரித்திரம் படைத்துள்ளதை நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதே போல பல முன்னாள் இந்நாள் வீரர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்ட போது இந்தியாவின் வெற்றியை நினைத்து தம்முடைய இதயம் வேகமாக துடித்ததாக தோனி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இருப்பினும் அழுத்தத்தை தாண்டி வெற்றியை பெற்றுக் கொடுத்த இந்திய அணி வரும் ஜூலை 7ஆம் தேதி வரவிருக்கும் தம்முடைய பிறந்தநாளுக்கு விலைமதிப்பில்லா பரிசை பரிசளித்துள்ளதாக தோனி நன்றியும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளது பின்வருமாறு. “உலகக் கோப்பை சாம்பியன்ஸ் 2024. என்னுடைய இதயத்துடிப்பு உயர்ந்தது. முக்கிய நேரத்தில் அமைதியாக இருந்து தன்னம்பிக்கையுடன் நீங்கள் செய்துள்ள இந்த சாதனைக்காக வெல்டன்”

இதையும் படிங்க: இந்தியா என்னையே அழ வெச்சுடுச்சு.. 16வது ஓவரில் இதை செஞ்சேன்.. 2024 டி20 உ.கோ தொடர்நாயகன் பும்ரா

“சொந்த ஊர் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள இந்தியர்கள் நீங்கள் கொண்டு வரும் கோப்பைக்காக மிகப்பெரிய நன்றியுடையவர்கள். வாழ்த்துக்கள். இந்த விலைமதிப்பற்ற பிறந்தநாள் பரிசுக்காக நன்றி” என்று கூறியுள்ளார். பொதுவாகவே யாருக்கும் எதற்கும் வாழ்த்து தெரிவிக்காத தோனி இந்தியா 17 வருடங்கள் கழித்து கோப்பையை வென்றதால் அரிதாக வாழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -