- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பாரத பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோள். தல தோனி செய்துள்ள மாற்றம் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

இந்திய நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி இந்தியா முழுவதும் “சுதந்திர தின அமிர்த பெருவிழா” என்ற பெயரில் பல்வேறு செயல்பாடுகளை மத்திய அரசு முன்னெடுத்து நடத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு இந்த 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் ஒரு திட்டத்தை அறிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் சுதந்திர தினமான 15-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் இந்திய மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் மூவர்ண கொடியை ஏற்றி பறக்க விடுமாறு பொதுமக்களுக்கு மத்திய அரசாங்கத்திடம் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை இந்தியர்கள் அனைவரும் தங்களது சமூக ஊடக கணக்குகளில் முகப்பு படமாக இந்திய நாட்டின் மூவர்ண தேசியக் கொடியை வைக்க வேண்டும் என்று இந்தியர்களுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார்.

- Advertisement -

மேலும் தன்னுடைய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய பக்கங்களின் முகப்பினையும் அவர் மூவர்ண கொடியாக மாற்றி இருந்தார். இதனை அடுத்து அவரது வேண்டுகோளின் படி இந்தியா முழுவதும் பல்வேறு பிரபலங்களும் தங்களது முகப்பு படத்தினை மூவர்ண கொடியாக மாற்றி வருகின்றனர்.

அந்த வகையில் பிரதமர் மோடியின் அந்த வேண்டுகோளை ஏற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி தனது சமூக வலைதள பக்கங்களான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் என இரண்டிலுமே அவரது புகைப்படத்தை நீக்கிவிட்டு தேசியக்கொடியை முகப்பு புகைப்படமாக மாற்றியுள்ளார்.

- Advertisement -

சமூக வலைதளத்தில் பெரிதளவு நாட்டம் காட்டாமல் இருந்து வரும் தோனி தற்போது அவரது சமூக வலைதள பக்கத்தில் முகப்பில் தேசியக் கொடியினை வைத்துள்ளது அனைவரது மத்தியிலும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க : என்ன நடந்தாலும் சரி. இந்த வீரர்கள் இந்த ஒரு விஷயத்தை செய்யவே கூடாது – பி.சி.சி.ஐ எச்சரிக்கை

அதுமட்டுமின்றி சமூகவலைதள பக்கங்களில் அவரது முகப்பு மாற்றப்பட்ட இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்காமல் தென்படும் தோனியே தனது முகப்பினை மாற்றியுள்ளதால் அவரது ரசிகர்களும் தங்களது முகப்பினை மூவர்ண கோடியாக மாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by