தென்னாபிரிக்காவை ஃபினிஷ் செய்த கோலி.. குரு – சிஷ்யனுக்கு இலக்கணமாக நின்ற தோனி.. டி20 உ.கோ ரீவைண்ட்

MS Dhoni Virat Kohli
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா மண்ணில் நடைபெற்று வருகிறது. கடந்த 17 வருடங்களாக நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி சில மகத்தான வெற்றிகளை பெற்றுள்ளது. அந்த வரிசையில் 2014 டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெற்றதை மறக்க முடியாது.

ஆம் அந்தத் தொடரில் லீக் சுற்றில் தேவையான வெற்றிகளை பெற்ற இந்தியா 2014 ஏப்ரல் நான்காம் தேதி மிர்ப்பூரில் தென்னாப்பிரிக்காவை 2வது செமி ஃபைனலில் எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 173 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் டு பிளேஸிஸ் 58, ஜேபி டுமினி 45* ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

குரு சிஷ்யன் நட்பு:
இந்தியா சார்பில் அதிகபட்சமாக தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா 24, அஜிங்க்ய ரஹானே 32 ரன்கள் அடித்து ஓரளவு நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதை வீணடிக்காமல் மூன்றாவது இடத்தில் களமிறங்கிய விராட் கோலி நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடி இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார்.

இருப்பினும் எதிர்புறம் வந்த யுவராஜ் சிங் தடுமாற்றமாக விளையாடி 18 (17) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். ஆனால் அடுத்ததாக வந்த சுரேஷ் ரெய்னா அதிரடியாக 21 (10) ரன்கள் குவித்து கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்த போது 19வது ஓவரின் 3வது பந்தில் அவுட்டானார். அந்த சமயத்தில் இந்தியாவின் வெற்றிக்கு வெறும் 10 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

- Advertisement -

அப்போது எதிர்ப்புறம் தொடர்ந்து அரை சதமடித்து அசத்திய விராட் கோலி 19வது ஓவரின் 4வது பந்தில் பவுண்டரி அடித்து 5வது பந்தில் சிங்கிள் எடுத்தார். அதன் காரணமாக கடைசி பந்தில் 1 ரன் மட்டுமே தேவைப்பட்டதால் அடுத்ததாக களமிறங்கியிருந்த கேப்டன் தோனி ஃபினிஷிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அழுத்தமான செமி ஃபைனலில் அட்டகாசமாக விளையாடி வெற்றியை உறுதி செய்த விராட் கோலி தான் ஃபினிஷிங் செய்ய வேண்டும் என்று தோனி விரும்பினார்.

அதனால் எளிதாக அடிக்கக்கூடிய கடைசி பந்தை அவர் அப்படியே தடுத்து நிறுத்தினார். அதை எதிர்ப்புறமிருந்து பார்த்து வியந்து போன விராட் கோலி ஃபினிஷிங் செய்யவில்லையா? என்ற வகையில் ரியாக்சன் கொடுத்தார். அதற்கு “அடுத்த பந்தில் நீ பினிஷிங் செய்” என்று தோனி கண்களாலேயே பதிலளித்தார். அதைத் தொடர்ந்து அதற்கடுத்த பங்கிலேயே பவுண்டரியை பறக்கவிட்ட விராட் கோலி மொத்தம் 72* (44) ரன்களை விளாசி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

ஆரம்பக் காலங்களில் தடுமாறிய விராட் கோலிக்கு கேப்டனாக தோனி ஆதரவும் வாய்ப்பும் கொடுத்து பெரியளவில் வளர்வதற்கு குருவை போல் முக்கிய பங்காற்றியதை அனைவரும் அறிவோம். அந்த நிலையில் அப்போட்டியில் உண்மையான வெற்றியை பெற்றுக் கொடுத்த விராட் கோலிக்கு ஃபினிஷிங் செய்யும் வாய்ப்பை கொடுத்த தோனி தனது சிஷ்யன் போட்டியை முடிக்கும் அழகை எதிர்ப்புறமிருந்து பார்த்து ரசித்தார் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: பாபர் கிடையாது.. அவரால் தனியாளா இந்தியாவை தோற்கடிக்க முடியும்.. மற்றபடி பாகிஸ்தான் சுமார் தான்.. ஃகைப்

அது சக வீரர்களுக்கு மரியாதையும் வாய்ப்பையும் கொடுக்க வேண்டும் தோனியின் தலைமை பண்புக்கு சான்றாகவும் அமைந்தது. மொத்தத்தில் குரு – சிஷ்யன், சீனியர் – ஜூனியர், கேப்டன் – வீரர் என்ற அனைத்திற்கும் அன்றைய நாளில் தோனி – விராட் கோலி ஆகியோர் இலக்கணமாக நின்றது இன்றும் இந்திய ரசிகர்களின் மனதில் நீங்காமல் நிற்கிறது.

Advertisement